You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'காஸாவில் பட்டினி என்பது பொய்' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
'' காஸாவில் இஸ்ரேல் பட்டினி ஏற்படுத்துவது போல சித்தரிக்கப்படுகிறது. எவ்வளவு அப்பட்டமான பொய். காஸாவில் பட்டினியை ஏற்படுத்த எங்களிடம் எந்த கொள்கையும் இல்லை. காஸாவில் பட்டினி இல்லை.'' என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
மேலும் அவர், ''போர் காலம் முழுவதும் மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குள் நுழையை நாங்கள் அனுமதித்தோம். இல்லையென்றால், காஸாவாசிகள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், மனிதாபிமான உதவி விநியோகத்தை தடுப்பது யார்? ஹமாஸ். ஆனால், உண்மையை மாற்றுகிறார்கள். மனிதாபிமான உதவிகளை கொள்ளையடித்து திருடுகின்றனர். பின்னர் இஸ்ரேல் வழங்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
பாதுகாப்பான வழித்தடங்களை முறையாக அறிவித்துள்ளோம். இனி ஐ.நா.வுக்கு எந்த சாக்குப்போக்கும் இல்லை. பொய் சொல்வதை நிறுத்துங்கள். சாக்குப்போக்கு கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள். இந்த மோசமான பொய்யை இஸ்ரேல் மீது வேண்டுமென்றே சுமத்துவதை நிறுத்துங்கள். காஸாவில் பட்டினி இல்லை. காஸாவை பட்டினி போடும் கொள்கை எங்களிடம் இல்லை. எங்கள் போர் இலக்குகளை அடைய உறுதி கொண்டுள்ளோம். எங்கள் பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை, ஹமாஸின் ராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை அழிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். அவர்கள் இனி இருக்க மாட்டார்கள். இனி இதுபோன்ற படுகொலைகள் எதுவும் இருக்காது. இனி இது போன்ற கோரத்தனம் இருக்காது.'' என்றார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு