காணொளி: அமெரிக்காவில் 14 ஆயிரம் ஏக்கருக்கு பரவிய காட்டுத் தீ

காணொளிக் குறிப்பு, கலிஃபோர்னியாவில் பரவிய காட்டுத் தீ
காணொளி: அமெரிக்காவில் 14 ஆயிரம் ஏக்கருக்கு பரவிய காட்டுத் தீ
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் ஃப்ரெஸ்னோ கவுண்டியில் பரவிய கார்னெட் காட்டுத் தீயால் அதிக அளவில் புகை வெளியேறுவதை டைம்லேப்ஸ் காட்சி காட்டுகிறது.

சுமார் 14,000 ஏக்கரில் இருந்த மரங்கள் காட்டுத்தீயால் எரிந்து போயின. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 1,000-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த காட்டுத் தீக்கு மின்னல் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க வனத்துறை தெரிவித்தது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு