You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிமிஷா பிரியா - ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியரின் முழு பின்னணி
'நிமிஷா பிரியா', இந்தப் பெயர் மீண்டும் செய்திகளில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷாவுக்கு, 2017இல் ஏமனில் அந்நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக 2020-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்கு வரும் ஜூலை 16 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அவரது குடும்பத்தின் சார்பாக ஏமனில் இந்த வழக்கை கையாளும் சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் கூறினார்.
அதே சமயம், ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியுடன் இந்தியாவுக்கு நேரடியாக தூதரக உறவுகள் இல்லை எனும் நிலையில், இந்திய தூதரகம் இந்த தகவலை உறுதிப்படுத்த முயற்சி எடுத்துவருவதாக பிபிசியிடம் கூறியுள்ளது.
இது தொடர்பான மேலும் சில முக்கிய செய்திகளின் இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது
இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
கடந்த 2017-ம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் உடல் வெட்டப்பட்ட நிலையில் தலோல் அப்டோ மஹ்தி என்பவர் கண்டெடுக்கப்பட்டார். அவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்தியப் பெண் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அதிகப்படியான மயக்க மருந்தை கொடுத்ததாகவும், உடலை வெட்டியதாகவும் அவர் மீது குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை நிமிஷா மறுத்தார்.
2020-ல் ஒரு உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து நிமிஷா பிரியா குடும்பத்தினர் ஏமன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் 2023-ம் ஆண்டு மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இந்த வழக்கில் இதுவரை நடைபெற்றது என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு