காணொளி: 'மெலிசா' புயலுக்கு நடுவே நுழைந்த விமானம்
காணொளி: 'மெலிசா' புயலுக்கு நடுவே நுழைந்த விமானம்
பிரசுரிக்கப்பட்டது
மெலிசா புயலுக்கு மத்தியில் அமெரிக்க விமானப்படையின் ‘Hurricane Hunters’ பிரிவினர் தேசிய சூறாவளி மையத்திற்காக தரவுகளை சேகரித்த காட்சி இது.
மெலிசா, ஐந்தாம் பிரிவு புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல 2025ல் இதுவரை ஏற்பட்ட உலகின் சக்தி வாய்ந்த புயலும் மெலிசா தான். இதனால் மணிக்கு 282 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் ஜமைக்காவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசு அமைத்துள்ள சுமார் 900 தங்குமிடங்களுக்கு செல்லுமாறு ஜமைக்கா அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தி உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



