You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் மீது மிகப்பெரிய அளவில் ரஷ்யா டிரோன் தாக்குதல் - நடந்தது என்ன?
யுக்ரேன் தலைநகர் கீயவில் மிகப்பெரிய டிரோன் தாக்குதலை ரஷ்யா தொடுத்திருப்பதாக கீயவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த ஆண்டில் தொடங்கிய நிலையில், இதுவரையிலான ட்ரோன் தாக்குதல்களில் இதுதான் மிகப்பெரியது என கீயவ் மேயர் குறிப்பிட்டுள்ளார் சனிக்கிழமை, கீயவ்வின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து அலையலையாக தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதனால் 6 மணி நேரம் வரை கீயவ்வின் பல்வேறு பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டது
இரானின் தயாரிக்கப்பட்ட 75க்கும் மேற்பட்ட ஷாஹித் டிரோன்கள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் ஒன்றைத் தவிர இதர டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)