You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிஜ்ஜார் கொலை: கனடா விசாரணைக்கு ஒத்துழைக்க இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என இந்தியாவிடம் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஆதாரங்களை முன்வைத்தால் விசாரிக்கத் தயார் என இந்தியா ஏற்கனவே சொல்லிவிட்ட நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கரிடம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கனடா விவகாரம் குறித்து பேசியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். செப்டம்பர் 28ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கனை ஜெய் சங்கர் சந்தித்துப் பேசினார். இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
அப்போது பேசப்பட்ட விவரங்கள் என்ன? என்பதை விரிவாக காணொளியில் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)