டிவிட்டர் 'சி.இ.ஓ. பதவிக்கு முட்டாளை' தேடும் ஈலோன் மஸ்க்

டிவிட்டர் 'சி.இ.ஓ. பதவிக்கு முட்டாளை' தேடும் ஈலோன் மஸ்க்
பிரசுரிக்கப்பட்டது

டிவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்து தான் விலகலாமா என்று ஈலோன் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் 57 சதவீதம் பேர் அவர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, சி.இ.ஓ. பதவியில் இருந்து விலகுவதாக மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நடத்திய வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர் மஸ்க் பதவி விலக வேண்டும் என்றும் 42.5 சதவீதம் பேர் அவர் பதவி விலக வேண்டாம் என்றும் தங்கள் வாக்கை பதிவு செய்திருந்தனர்.

தனது டிவிட்டர் பக்கத்தில் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில் , ''இந்த பதவியை ஏற்கும் அளவுக்கு வேறொரு முட்டாள் கிடைத்ததும் சி.இ.ஓ. பதவியை நான் ராஜினாமா செய்வேன்.

அதற்கு பின்னர், மென்பொருள் மற்றும் சர்வர்ஸ் அணிகளை நான் நிர்வகிப்பேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: