You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம். கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இந்த வாரம், 'பிபிசி ஆவணப்பட திரையிடலுக்கு கிளம்பிய எதிர்ப்பு, காங்கிரஸுக்கு கமல் ஆதரவளிப்பதன் காரணம், 43 லட்சம் இந்தியர்கள் சாக வின்ஸ்டன் சர்ச்சில் காரணமானது எப்படி? ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதை, கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் 'புதிய ஆயுதங்கள்' என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
பிபிசி ஆவணப்பட திரையிடல்: ஜே.என்.யூ. வளாகத்தில் மின் தடை, மாணவர்கள் மீது கல் வீச்சு
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.பி.சி.யின் ‘இந்தியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவணப்பட திரையிடலின் போது மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆவணப்படத்தைப் பார்த்த மாணவர்கள் கல் வீச்சுக்குப் பிறகு ஜே.என்.யூ. வாயில் வரை பேரணியாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர். மாணவர்கள் யார்? கற்களை வீசியது யார் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. கல்வீச்சில் சில மாணவர்கள் காயமடைந்தனர். சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சில மாணவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். விரிவாக படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.
'இது ஓர் அவசரநிலை' - காங்கிரஸுக்கு கமல் ஆதரவளிப்பதன் காரணம் என்ன?
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.எஸ்.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். முழு பின்னணி அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
43 லட்சம் இந்தியர்கள் சாக வின்ஸ்டன் சர்ச்சில் காரணமானது எப்படி?
பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அவர் இரண்டாம் உலக போரின் நாயகனாக நினைவு கூறப்படுகிறார். ஹிட்லர் போன்ற சக்தி வாய்ந்த சர்வாதிகாரியை எதிர்த்துப் போராடி தோற்கடித்த தலைவராக அவர் பார்க்கப்படுகிறார்.
அவர் பிரிட்டனில் ஒரு சக்திவாய்ந்த தலைவராக பார்க்கப்படுகிறார் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் பிரிட்டனின் காலனித்துவ வரலாற்றில் அவரது ஆட்சியுடன் தொடர்புடைய ஓர் இருண்ட அத்தியாயமும் உள்ளது. இது இந்தியாவுடன் நேரடியாக சம்மந்தப்பட்டது. லிங்கை க்ளிக் செய்து முழுமையாக வாசிக்கலாம்.
ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதை
நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கருக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த ஆவணப்படம். விரிவான செய்தியை அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் 'புதிய ஆயுதங்கள்'
இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. கூடவே ஐ.சி.சி. ஒருநாள் தர வரிசையில் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. முழுமையாக அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.