You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: முதலையை தோளில் சுமந்து சென்ற விவசாயி
பிகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில், ஒரு நபர் தனது தோளில் முதலையைச் சுமந்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
வயல்வெளியில் கிராம மக்கள் ஒரு முதலையைப் பார்த்துள்ளனர். இந்தத் தகவல் பரவியதும் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர். முதலையைப் பிடித்து வைத்திருந்த கிராம வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இருப்பினும், அதற்குள் ஒரு நபர் அந்த முதலையைத் தனது தோளில் சுமந்துகொண்டு அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டார்.
காவல் நிலையம் வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு பரிசோதனைக்குப் பிறகு ஆற்றில் விட்டனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு