காணொளி: அலாஸ்காவில் புதினை சந்தித்த பிறகு டிரம்ப் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, புதினை சந்தித்த பிறகு டிரம்ப் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பு நேற்று (ஆகஸ்ட் 15) அலாஸ்காவில் நடைபெற்றது. மூன்று மணி நேர சந்திப்பிற்குப் பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய டிரம்ப், "சுருக்கமாக சொல்வதென்றால், நான் சிலருக்கு போன் கால் செய்ய வேண்டும். நடந்ததை அவர்களுக்கு சொல்ல வேண்டும். நாம் மிகவும் பயனுள்ள ஒரு சந்திப்பை நடத்தியிருந்தோம். பல அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. சில விஷயங்கள் மீதமுள்ளன.

சில முக்கியமல்ல. ஆனால் ஒன்று மிகவும் முக்கியமானது. அதை அடைய நல்ல வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் அதை அடையவில்லை. ஆனால் அதை எட்ட நல்ல வாய்ப்பு இருக்கிறது." என்று தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு