You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: காஸா திரும்பும் பாலத்தீனர்கள் - பணையக்கைதிகள் விடுவிப்பு எப்போது?
பாலத்தீனர்கள் காஸாவுக்குள் திரும்பும் காட்சி இது. காஸா போர் நிறுத்தம் அமலாகியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதையடுத்து காஸாவில் இருந்து வெளியேறிய பாலத்தீனர்கள் மீண்டும் அங்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
காஸாவில் உடனடியாக உதவிகள் தடையின்றி செல்லவும் அனுமதிக்கப்படவுள்ளது.
இஸ்ரேலிய படைகள் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிக்கு காஸாவிலிருந்து பின்வாங்க தொடங்கியுள்ளன.
காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட முடிவெடுக்க அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் விரைவில் எகிப்துக்கு பயணம் செய்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
முதற்கட்ட போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்ட நிலையில், காஸாவில் அடுத்து என்ன நடக்கும்? பணயக்கைதிகளை ஹமாஸ் எப்போது விடுவிக்கும்? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு