You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நாங்கள் இந்தியர்களே' - குஜராத்தில் வீடுகளை இழந்த மக்கள் கண்ணீர் - பிபிசி கள ஆய்வு
குஜராத்தில் சண்டோலா ஏரிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக குஜராத் மாநில அரசு கூறுகிறது. அங்கு வசிப்பவர்கள் வங்க தேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் என்றும் அரசு கூறுகிறது.
ஆனால் அங்கு வசிப்பவர்கள் தாங்கள் இந்தியர்கள் தான் என்றும் அதற்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளன என்றும் கூறுகின்றனர். தங்கள் வீடுகளை இடிப்பதற்கு முன் தங்களிடம் உள்ள ஆவணங்களை அரசு சரிபார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தையும் அவர்கள் நாடியுள்ளனர்.
இந்த விவகாரத்தின் முழு விவரங்களை பிபிசி நடத்திய கள அறிக்கையின் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு