You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் தொழிலாளி அலிஷா சுகாதார பணியாளர் ஆன கதை (காணொளி)
இந்தச் செய்தி குர்காவ் கி ஆவாஸ் செய்தி ஊடகத்துடன் இணைந்து மகளிரிடம் சிறந்த இதழியலை கொண்டு செல்ல BBCShe எடுத்துள்ள முன்னெடுப்பு.
ஆஷூ என்னும் தன் அடையாளத்தை எதிர்த்து அலிஷாவாக மாறி, திருநங்கை சமூகத்தினரிடையே வெற்றியாளராக மாறியது எப்படி? அலிஷாவின் உணர்ச்சி போராட்டத்தை விவரிக்கிறது இந்தச் செய்தி.
திருநங்கையான அலிஷாவை, இரவு நேரங்களில் இந்த சாலைகளில் அடிக்கடி காணமுடியும். பாலியல் தொழில் அவரின் முதல் தேர்வாக இருக்கவில்லை, ஆனால் 13 வயதில் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தபோது, அவருக்கு பிழைப்புக்கு வேறு வழி ஏதும் தெரியவில்லை. தனது அடையாளத்தோடு வெளிப்படையாக வாழ்வதற்கு அவர் கொடுத்த விலைதான் இந்த வேலை.
அலிஷா அவரது வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பட்னாவில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருப்பது அவருக்கு அழுத்தம் நிறைந்ததாக இருந்தது. அலிஷா ஒரு ஆணின் உடலில், தான் கட்டி வைக்கப்பட்டது போல உணர்ந்தார். அதன் பிறகு ஆஷூ என்னும் தன் அடையாளத்தை விட்டுவிட்டு, அலிஷாவாக மாற விரும்பினார்.
அலிஷா தனக்கான புதிய பாதையை கண்டுபிடித்தார். திருநங்கைகள் சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, பால்வினை நோய்கள். அலிஷா அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவத் தொடங்கினார். மற்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்த அலிஷாவுக்கு, குருகிராமில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது.
அலிஷா இப்போது தனது சமூகத்தினர் மத்தியில் ஒரு முக்கிய நபராக உருவெடுத்து இருக்கிறார். அலிஷா இப்போது தலை நிமிர்ந்து நடந்து வருகிறார். அவரின் தலை கடவுளுக்கு முன்பாக மட்டுமே வணங்குகிறது.
செய்தியாளர் - பிரியங்கா திமான்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - தெப்ளின் ராய்
BBCShe தொடர் தயாரிப்பாளர்: திவ்யா ஆர்யா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்