பப்புவா நியூ கினி: மண்ணுக்குள் புதைந்த 670 பேர், தொடரும் நிலச்சரிவுகள் - முழு விவரம்

பப்புவா நியூ கினி: மண்ணுக்குள் புதைந்த 670 பேர், தொடரும் நிலச்சரிவுகள் - முழு விவரம்
பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கு அடியில் புதைந்துவிட்டதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோஃப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததைவிட அதிகமாக இருந்தது," என்றார்.

"இப்போது 150க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.