You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக கூட்டணி முறிவு: அண்ணாமலை சொன்ன பதில் என்ன?
சமீபத்தில் டெல்லி சென்று திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “வரவுள்ள 2024 என்பது நரேந்திர மோதிக்கான தேர்தல். இந்தத் தேர்தலில் அனைத்து தொகுதிகளும் நரேந்திர மோதியின் வசம் கிடைக்கும்,” என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்துள்ளது என்றும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியே திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)