இந்தியாவை பாதிக்குமா அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சி? ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி (காணொளி)

இந்தியாவை பாதிக்குமா அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சி? ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் சிலிக்கன் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி என வங்கிகள் திவாலாவது தொடர்கதை ஆகியிருக்கிறது. இந்த வங்கிகள் வீழ்ச்சி அடைவதற்கு என்ன காரணம், இது உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா, இதனால் இந்தியாவில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்த பல தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்திருக்கிறார் பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

அப்போது பேசிய அவர், ”இந்த விவகாரம் இந்த அளவுக்குப் பேசப்படுவதற்கு முக்கியமான காரணம், தற்போது பிரச்னையில் சிக்கியிருக்கும் சிலிக்கான் வேலி வங்கியில்தான் பல Start - up நிறுவனங்களும் இடர்நிதி நிறுவனங்களும் தங்கள் நிதியை முதலீடு செய்து வைத்திருந்தன.

இந்த வங்கி அமெரிக்காவில் 16வது பெரிய வங்கி. ஆகவேதான் இவ்வளவு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். விரிவான அலசல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: