'என் மகளுக்கு கல்வியை தர விரும்புகிறேன்' - மாற்றத்திற்காக பாடுபடும் நடனக்கலைஞர்கள்

காணொளிக் குறிப்பு, லாவணி நடனமாடும் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் கதை
'என் மகளுக்கு கல்வியை தர விரும்புகிறேன்' - மாற்றத்திற்காக பாடுபடும் நடனக்கலைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவின் இரண்டு நகரங்களான அகமத்நகர் மற்றும் பீட் ஆகியவற்றை இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை, ஜாம்கேத் என்ற தூசி நிறைந்த சிறிய நகரத்தின் வழியாக செல்கிறது.

இங்கே பகல்கள் மிகவும் அமைதியாக இருக்கின்றன. ஆனால் இரவுகள் வேறு கதையைச் சொல்கின்றன. பெண்கள் நடனமாடுவதைக் காண அருகிலுள்ள நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் இருந்து ஆண்கள் இங்கு வருகிறார்கள். இது லாவணி உலகம்.

ஜாம்கேத்தில் மட்டும் 10 பொழுதுபோக்கு தியேட்டர்கள் உள்ளன. அங்கே அட்டகாசமான நிகழ்ச்சிகள், பண மழை மற்றும் 'தனியார்' காட்சிகள் அரங்கேறுகின்றன.

தலைமுறை தலைமுறையாக, ஆண்களை மகிழ்விப்பதற்காக இந்தப் பெண்கள் இந்தத் தியேட்டர்களில் நடனமாடி வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் பாலியல் ரீதியிலான சுரண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில், அவர்களின் வறுமை அவர்களை பாலியல் தொழிலுக்குள் தள்ளுகிறது.

செய்தியாளர் - அனகா பதக்

ஒளிப்பதிவு - மங்கேஷ் சோம்வானே, மதுரம் சோல்கெப்பலி

படத்தொகுப்பு - நீலேஷ் போஸ்லே

BBCShe தயாரிப்பாளர் - திவ்யா ஆர்யா

இந்த செய்தி பாய்மானுஸ் செய்தி ஊடகத்துடன் இணைந்து மகளிரிடம் சிறந்த இதழியலை கொண்டு செல்ல BBCShe எடுத்த முன்னெடுப்பாகும்.

லாவணி நடனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: