காணொளி: தூத்துக்குடியில் ஏற்பட்ட சூறைக்காற்றில் பறந்த சுங்கச்சாவடியின் மேற்கூரை
காணொளி: தூத்துக்குடியில் ஏற்பட்ட சூறைக்காற்றில் பறந்த சுங்கச்சாவடியின் மேற்கூரை
பிரசுரிக்கப்பட்டது
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் அருகே ஏற்பட்ட சுழற் காற்று தரையில் இருந்து வேகமாக சுழன்று அடித்தபடி வான் நோக்கி கிளம்பியது.
இந்த சூறைக்காற்றின் காரணமாக சுங்கச்சாவடியின் மேற்கூரை கூரைகள் பெயர்ந்து முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் சுங்கச் சாவடியின் அருகில் இருந்த வாகனங்களும் இதில் சேதமடைந்தன.
தூத்துக்குடி புறநகர் பகுதியில் ஏற்பட்ட சுழல் காற்றின் காரணமாக 8 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



