இரான் - சௌதி உறவில் மாற்றம்: இந்தியாவுக்கு சாதகமா பாதகமா? (காணொளி)

இரான் - சௌதி உறவில் மாற்றம்: இந்தியாவுக்கு சாதகமா பாதகமா? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே மாறிவரும் உறவுகளுடன், அங்கு இந்தியாவின் பங்கு குறித்தும் விவாதம் துவங்கியுள்ளது.

வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு பல முக்கியமான துறைகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பல அம்சங்களில் இந்தியா இந்த நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. பெரும்பாலான வளைகுடா நாடுகளுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளது. இந்த உறவில் மிக முக்கியமானது எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகமாகும்.

இது தவிர, வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பணிபுரிவதும், அவர்கள் தாயகத்திற்கு பணம் அனுப்புவதும் இந்த உறவின் முக்கிய அம்சங்களாகும். இராக்கிடம் இருந்து இந்தியா அதிகபட்ச கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதற்கு அடுத்தபடியாக செளதி அரேபியா வருகிறது. ஆனால், இதற்கிடையே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே மாறிவரும் உறவுகளுடன், அங்கு இந்தியாவின் பங்கு குறித்தும் விவாதம் துவங்கியுள்ளது. இந்த விவாதத்தில் சீனாவும் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. செளதி மற்றும் இரான் இடையேயான ஒப்பந்தத்தில் அதன் நேரடி பங்கு தெளிவாகத் தெரிகிறது. விரிவான அலசல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: