You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹிஜாப் அணியாமல் பாடிய இரானிய பாடகிக்கு 74 கசையடி தண்டனை
ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய இரான் பாடகிக்கு 74 கசையடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பரில், பரஸ்தூ அஹ்மதி தனது இசை நிகழ்ச்சியின் வீடியோவை யூடியூபில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில், அவர் தலைக்கு அணியும் ஹிஜாப் இல்லாமல் மேடையில் இருந்தார். சில மணித்திலேயே அந்தக் காணொளி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றது.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக இரான் நீதித்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற இடமும் மூடப்பட்டது.
பரஸ்தூ அஹ்மதி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட 8 பேருக்கு 74 கசையடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் பயணம் செய்யவும், கலை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு