'இந்தியா மீது விதித்த வரியை அமெரிக்கா நீக்குமா?' - டிரம்ப் கூறிய பதில்

'இந்தியா மீது விதித்த வரியை அமெரிக்கா நீக்குமா?' - டிரம்ப் கூறிய பதில்
பிரசுரிக்கப்பட்டது

வாஷிங்கடனில் நேற்று (செப்டம்பர் 2) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "நீங்கள் இந்தியா மீது விதித்த சில சுங்க வரியை நீக்கப் பரிசீலித்து வருகிறீர்களா?" என டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "இல்லை, நாங்கள் இந்தியாவுடன் நன்கு பழகுவோம். ஆனால் பல ஆண்டுகளாக இந்தியாவுடன் ஒருதலைபட்ச உறவு இருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது தான், நான் ஆட்சிக்கு வந்த பிறகு மற்றும் வரிகளில் நமக்குள்ள சக்தியினால், இந்தியா எங்கள் மீது அதிக வரி விதித்தது என்பதை கவனித்தோம். அது உலகில் மிகவும் உயர்ந்தது. நம்பர் 1 அளவு."

"அதனால், நாங்கள் இந்தியாவுடன் அதிக வர்த்தகம் செய்யவில்லை. ஆனால் அவர்கள் எங்களுடன் வர்த்தகம் செய்தனர். ஏனெனில், நாங்கள் மூடத்தனமாக அவர்களிடம் வரி விதிக்கவில்லை. நாங்கள் வரி விதிக்கவில்லை. எனவே, அவர்கள் அதிக அளவில் அவர்கள் உருவாக்கும் அனைத்தையும் அமெரிக்காவுக்கு அனுப்பினர். அதனால், அது இங்கே தயாரிக்கப்படுவதில்லை, இது எதிர்மறையானது." என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு