பயோமைனிங் திட்டம்: பெருங்குடி குப்பைக் கிடங்கு பிரச்னை நிரந்தரமாக தீருமா?

பயோமைனிங் திட்டம்: பெருங்குடி குப்பைக் கிடங்கு பிரச்னை நிரந்தரமாக தீருமா?
பிரசுரிக்கப்பட்டது

75 வயதான நடராஜன் சென்னை பெருங்குடி குப்பை கிடங்கிற்கு அருகில் வசிக்கிறார். கடந்த 13 ஆண்டுகளில் பலமுறை அவர் சுவாச பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கிறார்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரின் உடல்நிலை மிகவும்மோசமாகி, அடிக்கடி ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்.

சென்னையில் குவியும் குப்பை பிரச்னைக்கு தீர்வாக ரூ.350கோடி செலவில் 2022ல் அறிமுகம் செய்யப்பட்ட பயோமைனிங் என்ற மறுசுழற்சி செய்யும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டுவருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் பயோமைனிங் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னைகளுக்கு ஆளானதாகச் சொல்கிறார் நடராஜன். அவரை போலவே பெருங்குடி பகுதியில் வசிக்கும் பலரும் மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளதாக அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர்.

தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன், ஆர். நிஷாந்த் சாமுவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: