ஏ.சி.வசதி இல்லாத அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பு என்ன?

ஏ.சி.வசதி இல்லாத அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்துடன், ரயில் நிலையம் ஒன்றையும் பிரதமர் மோதி திறந்து வைத்துள்ளார். அத்துடன், இரண்டு அமிர்த பாரத் ரயில் சேவைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸில் ஏசி கிடையாது. இந்த ரயிலின் முன்னும் பின்னும் இரு என்ஜின்கள் உள்ளன. புதிய (push pull) தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்புறம் உள்ள என்ஜின் ரயிலை முன்னோக்க இழுக்கும் வேளையில், பின்புறம் உள்ள என்ஜின் ரயிலை முன்னோக்கி தள்ளும். இதனால், குறைந்த நேரத்திலே அம்ரித் பாரத் ரயில் வேகம் எடுத்துவிடும்.

படுக்கை வசதியுடன் கூடிய 12 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 8 பொதுப்பெட்டிகள், மற்றும் 2 கார்டு(Guard)பெட்டிகள் என மொத்தம் 22 பெட்டிகள் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸில் உள்ளன. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

மேலும் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலைய முனையக் கட்டிடம் 6,500 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் திறன் பெற்றது. விமான நிலையத்தில் மழை நீர் சேகரிப்பு, நீரூற்றுகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)