You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரக்யான் ரோவர் தரையிறங்கியதை உறுதிப்படுத்திய இஸ்ரோ
சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் நல்ல முறையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டர் எனப்படும் தரையிறங்கி கலனில் இருக்கும் மூன்று கருவிகள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக இஸ்ரோ அதன் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் நகரத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி உந்துவிசை கலனில் இருக்கும் ஷேப் எனப்படும் கருவியும் கடந்த ஞாயிறு முதல் இயங்கத் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று தரையிறங்கி தனது பணியை தொடங்கிய பிரக்யான் ரோவர், அடுத்த 14 நாட்களுக்கு செயல்படும்.
சூரிய ஒளி படும் 14 நாள்களிலும் ரோவரில் இருக்கும் மின்கலங்களை போதுமான அளவுக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டு, அதன் பிறகு 14 நாள்களுக்கு ரோவரை தூக்க நிலையில் வைத்துவிடுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்