மத்திய கிழக்கில் அமெரிக்க தலையீடுகளால் நிகழ்ந்தவை என்ன? - முழு பின்னணி

மத்திய கிழக்கில் அமெரிக்க தலையீடுகளால் நிகழ்ந்தவை என்ன? - முழு பின்னணி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க குடியரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரான் பால் ( Ron Paul) ஒருமுறை, நாம் ஏன் வெளியுறவுக் கொள்கையில் golden rule-ஐ கடைபிடிக்க கூடாது.

அதாவது நம் நாட்டுக்கு நாம் செய்ய விரும்பாததை மற்ற நாடுகளுக்குச் செய்யக்கூடாது. மற்ற நாடுகள் மீது நாம் தொடர்ந்து குண்டுவீசுகிறோம். பின், அவர்கள் ஏன் நம் மீது கோபப்படுகிறார்கள் என்று யோசிக்கிறோம் எனக் கூறினார்.

மற்ற நாடுகளில் இருக்கும் அமெரிக்காவின் நீண்டகால தலையீடு தொடர்பாக இந்தக் கருத்தை 2012ஆம் ஆண்டு ரான் பால் தெரிவித்திருந்தார். குறிப்பாக அமெரிக்க தலையீட்டால் மத்திய கிழக்கு பல திருப்புமுனைகளை கண்டிருக்கிறது.

அந்த வகையில், மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய முக்கிய உளவுத்துறை நடவடிக்கைகள் அல்லது ராணுவத் தலையீடுளின் முக்கிய தருணங்கள் பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.