கரையை கடந்த பிபர்ஜாய் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?

காணொளிக் குறிப்பு, கரையை கடந்த பிபர்ஜாய் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?
கரையை கடந்த பிபர்ஜாய் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல், வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் குஜராத்தின் கடலோரப் பகுதிகளில், கரையை கடக்க தொடங்கியது.

மாலையில் கரையை கடக்க தொடங்கிய பிபர்ஜாய் புயல், நள்ளிரவு வரை நீடித்தது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் குஜராத்தின் மாண்டவி பகுதிக்கும் இடையே அமைந்துள்ள ஜகாவ் என்ற இடத்தின் அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கரையை கடந்த பிபர்ஜாய் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஜூன் 15 ஆம் தேதி நள்ளிரவு வரை புயல் கரையை கடக்கும் நேரம் நீடித்து வந்தது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் பலத்த காற்று வீச தொடங்கியது.

மணிக்கு சுமார் 115 முதல் 125கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்குள்ள கடல் பகுதிகள் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: