BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், பாலியல் துன்புறுத்தலைச் சந்தித்த கலாக்ஷேத்ரா மாணவிகளின் கண்ணீர்க் கதை, விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய புகாரில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியை காப்பாற்ற முயல்கிறதா காவல்துறை? பிபிசி கள நிலவரம், அரபு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திடீர் முடிவு - என்ன காரணம்? இதனால் இந்தியாவுக்கு பாதிப்பா?, இலங்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலைவாசி எப்படி உள்ளது?, விடுதலை படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரமாக வரும் பெருமாள் வாத்தியார் யார்? என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
'வீடியோ காலில் வா; வீட்டுக்கு வரட்டுமா' பாலியல் துன்புறுத்தலைச் சந்தித்த கலாக்ஷேத்ரா மாணவிகளின் கண்ணீர்க் கதை
சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகக் கூறிக் கடந்த வாரம் மாணவர்களின் போராட்டம் நடைபெற்ற நிலையில், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் புகார் செய்ய முன்வந்த பல மாணவிகளிடம், புகாரைப் பெறுவதற்குப் பதிலாக, அவர்கள் படிப்பதில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அச்சுறுத்தப்பட்டதாக மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய புகாரில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியை காப்பாற்ற முயல்கிறதா காவல்துறை? பிபிசி களச் செய்தி

அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் குற்ற சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படுவோரின் பற்களை கட்டிங் பிளையர் கொண்டு பிடுங்கி சித்ரவதை செய்ததாக, அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்க்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அதிர்வலைகளை கிளப்பிய நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி தமிழ் விரிவாக கள ஆய்வு செய்தது.
இது பலனளிக்குமா? முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அரபு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திடீர் முடிவு - என்ன காரணம்? இதனால் இந்தியாவுக்கு பாதிப்பா?
செளதி அரேபியா, இராக், குவைத் உள்ளிட்ட பல நாடுகள் திடீரென எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன.
செளதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு ஐந்து லட்சம் பீப்பாய்கள் குறைக்கிறது.
இராக் உற்பத்தியை 2,11,000 பீப்பாய்கள் குறைக்கிறது.
உற்பத்தி குறைப்பு அறிவிப்புக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இலங்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலைவாசி எப்படி உள்ளது?
எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடந்த ஆண்டு இதேநேரம் கடுமையான தட்டுப்பாடு நிலவியது.
10 முதல் 12 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சார தடையை எதிர்நோக்கி கடுமையான சிரமத்தை மக்கள் கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் சந்தித்திருந்தனர்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
விடுதலை படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரமாக வரும் பெருமாள் வாத்தியார் யார்?

பட மூலாதாரம், FACEBOOK/ம.ராமமூர்த்தி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் வெளியானதில் இருந்து அதில் விஜய் சேதுபதி நடித்திருந்த 'பெருமாள் வாத்தியார்' என்ற கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் யார் என்ற கேள்வியை முன்வைத்து பலரும் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகின்றனர்.
அத்தகைய விவாதங்களில் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர் புலவர் கலியபெருமாள். யார் இந்த கலியபெருமாள்? அவருக்கும் தமிழ்தேசிய போராட்டத்திற்கும் என்ன தொடர்பு?
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












