You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நூற்றுக்கணக்கான யானைகள் ஒன்று கூடும் அதிசய நிகழ்வு - காணொளி
இலங்கையின் வட மத்திய பகுதியில் அமைந்திருக்கும் மின்னேரியா தேசிய பூங்காவில், பருவகால கால நிகழ்வாக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான யானைகள் ஒன்று கூடும் ‘The Great Elephant Gathering’ எனும் நிகழ்வு நடக்கிறது.
சுமார் இந்தக் காலகட்டத்தில் 100 - 200 எண்ணிக்கையில் யானைகள் கூட்டமாக இங்கே வருகின்றன. மே மாத மத்தியில் துவங்கும் இந்த நிகழ்வு, அக்டோபர் மாத மத்தியில் அல்லது இருந்து இறுதி வரை நீடிக்கிறது.
இந்த காலகட்டத்தில் இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த நிகழ்வினை ஆச்சரியத்துடன் கண்டுகளிக்கின்றனர். இத்தகைய அனுபவத்தை உலகில் வேறு எங்கும் இதற்கு முன் பெற்றதில்லை என்று கூறுகின்றனர்.
வறட்சியான காலங்களில் இந்த பூங்காவின் ஏரி அருகே இந்த யானைகள் கூட்டமாக வருகின்றன. புதிய நீர்த்தேக்க திட்டத்தினால் கடந்த 5 ஆண்டுகளாக இங்கே புல்வெளி நீரில் மூழ்கியிருந்தன. இப்போது, நீர்வரத்தை அதிகாரிகள் நிறுத்தியுள்ளதால், மீண்டும் யானைகள் வந்துள்ளன.
இலங்கை உட்பட உலகின் 13 நாடுகளில் தான் யானைகள் உள்ளது. இங்கே அதிகளவில் ஆசிய யானைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களை நெருங்கும் போது, 300 - 450 யானைகள் வரை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என ஆய்வாளரும், சுற்றுச்சூழல் நிபுணருமான டாக்டர் சுமித் பிலபித்தியா கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)