You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் சேதம் குறைவா? : மதிப்பீட்டு அறிக்கையை மறுக்கும் டிரம்ப்
இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது சனிக்கிழமை அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை அற்புதமான ராணுவ வெற்றி என டிரம்ப் குறிப்பிட்டார். இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் குறித்த பென்டகன் உளவுத்துறையின் ஆரம்பகால மதிப்பீடுகள் கசிந்துள்ளன.
தாக்குதலுக்குப் பின்னரும் இரானின் சென்ட்ரிஃபியூஜ் கட்டமைப்புகள் பெரும்பாலும் "அப்படியே" இருப்பதாகவும், நிலத்தடிக்கு மேலே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்ததாகவும் பென்டகன் மதிப்பீடு பற்றி நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன" என கூறிய டிரம்ப், வரலாற்றிலேயே மிகச் சிறந்த ராணுவ தாக்குதல்களில் ஒன்றை அவமதிக்க ஊடகங்கள் முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசியவர், "நமது பி2 விமானிகள் இதைச் சாத்தியமாக்கினார்கள். நிலவோ வெளிச்சமோ இல்லாத இரவில், மிகவும் துல்லியமான தாக்குதலை நடத்தினார்கள். இலக்கை சரியாகத் தாக்கி, முற்றிலுமாக அழித்துவிட்டார்கள். ஆனால் ஊடகங்கள் மிகவும் அவமரியாதையுடன் நடந்துகொள்கின்றன.விமானம் ஒவ்வொன்றும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது. இது அந்த விமானங்களைக் கடுமையான ஆபத்துகளுக்கு நடுவே வழிநடத்திய தேசபக்தர்களை அவமதிக்கும் செயலாகும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு