ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத பொருள் இந்திய ராக்கெட் பாகமா? உண்மை என்ன?

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத பொருள் இந்திய ராக்கெட் பாகமா? உண்மை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்ட சில நாட்களிலேயே ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத உலோக உருளை போன்ற பொருள் இந்தியாவுக்கு சொந்தமானதா என்று சந்தேகம் எழுந்தது.

இந்திய நேரப்படி இன்று காலையில் ட்வீட் செய்துள்ள ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம், “மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத பாகம், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இஸ்ரோ இதுகுறித்து இன்னும் எந்தவித விளக்கமும் வெளியிடவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: