You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸாவில் மனித உரிமை சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் - ஜஸ்டின் ட்ரூடோ
காஸாவில் மனித உரிமை சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் விவகாரத்தில் பல்வேறு நாடுகள் தாங்கள் யார் பக்கம் என்பதை வெளிப்படுத்தி வருகின்றன. இரான் வெளிப்படையாக ஹமாஸை ஆதரிக்கும் நிலையில், ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என பல்வேறு நாடுகள் தெரிவித்து வருகின்றன.
அதே கருத்தை முன் வைத்த கனட பிரதமர், ஹமாஸ் விடுதலை போராளிகள் அல்ல என்றார். இஸ்ரேல் தன்னை பாதுக்காத்துக் கொள்ளும் உரிமையை கனடா ஆதரிக்கிறது என்றார். ஆனால், காஸாவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மனிதநேய சட்டங்கள் பின்பற்ற வேண்டும், அவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல பாதை திறக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)