அமெரிக்காவின் ராணுவ உதவி நிறுத்தத்தால் யுக்ரேனுக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்காவின் ராணுவ உதவி நிறுத்தத்தால் யுக்ரேனுக்கு என்ன பாதிப்பு?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ராணுவ உதவி நிறுத்தப்படுவதால் யுக்ரேனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து பிபிசியின் பாதுகாப்புப் பிரிவு செய்தியாளர் ஜோனத்தன் தெரிவித்துள்ள கருத்துகளை இந்த காணொளியில் விரிவாக காணலாம்.

யுக்ரேனுக்கு 60% உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கி வந்தாலும், அமெரிக்காவின் ராணுவ உதவி யுக்ரேனுக்கு மிகவும் முக்கியமானது. உலகிலேயே வலிமையான ராணுவத்தைக் கொண்ட அமெரிக்காவால் வழங்கப்படும் நூற்றுக்கணக்கான கவச வாகனங்களை ஐரோப்பிய நாடுகளால் எப்போதும் ஈடுகட்ட முடியாது. மேலும் முக்கிய ராணுவ தகவல் பரிமாற்றத்திலும் அமெரிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இவை போர்க்களத்தில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், விரைவில் அதன் விளைவுகள் தெரியவரும். ஆனால் இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருக்கும் என்று ஐரோப்பிய நாடுகள் நம்பிக்கை கொள்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்த மேலும் பல தகவல்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)