You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன் - ஏன்?
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். இதற்காக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் காலக்கெடுவை அவர் விதித்துள்ளார்.
செங்கோட்டையன் விதித்துள்ள காலக்கெடு அதிமுக, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "என்னுடைய கருத்தை முன்வைத்திருக்கிறேன். அதற்குக் காலக்கெடு வைத்திருக்கிறேன். அது நடக்கவில்லையென்றால் எல்லோரையும் ஒருங்கிணைத்து அந்த பணிகளைச்செய்வோம். இப்போது பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறேன். பிறகு இதே மனநிலையோடு இருப்பவர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். என்னுடைய மனநிலையை, தொண்டர்களின் மனநிலையை முன்வைத்திருக்கிறேன்" என்றார்.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.