You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண் சி.இ.ஓ. தான் பெற்று வளர்த்த 4 வயது மகனை கொன்று பையில் எடுத்துச் சென்றது ஏன்?
தனது நான்கு வயது மகனைக் கொன்ற குற்றச்சாட்டில் 39 வயது பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண் ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சுச்சனசேத் என்பவரின் பையில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கோவாவில் சுச்சனாசேத் தனது மகனைக் கொலை செய்ததாகவும் பின்னர் உடலை பையில் வைத்துக்கொண்டு வாடகை வாகனத்தில் பெங்களூருவுக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் அவர் பயணித்த டாக்ஸியின் டிரைவரை தொடர்பு கொண்ட போலீசார், வழியிலுள்ள காவல் நிலையத்திற்கு வாகனத்தைத் திருப்பி விடும்படி உத்தரவிட்டுள்ளனர்.
அதையடுத்து சுச்சனாசேத்தை கைது செய்த போலீசார், அவரது பையில் இருந்த நான்கு வயது குழந்தையின் சடலத்தை மீட்டனர். சுச்சனாசேத்தின் இந்தச் செயலுக்கு சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)