You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'காமனெயி ஆதரவு போராட்டம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது' - டிரம்ப்
காமனெயி தொடர்புடைய காணொளி ஒன்று பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இன்னொரு விஷயம் — அது ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது. சுமார் 2,50,000 பேர் ஒரு சதுக்கத்தில் கூடி காமனெயியை எவ்வளவு நேசிப்பதாக கூறியதை அவர்கள் காட்டினர். அது முற்றிலும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது. அப்படி ஒன்று நடக்கவே இல்லை.
ஊடகங்களுக்கு அது நடைபெறவில்லை என்று தெரியும், ஆனால் அவர்களும் பெரும் ஆதரவு இருப்பதாக காட்டினார்கள். அவர்களுக்கு ஆதரவு இல்லை. மூன்று, நான்கு நாட்கள் முன்பு நடந்தது என்று சொன்ன அந்த பேரணி போலியானது. அது ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது.
ஏ.ஐ. மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். நாம் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பேரணி, நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். மக்கள் அந்த தலைமையை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அந்த தலைமை நாட்டை அழித்துவிட்டது." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு