மழைக்காலத்தில் சூடுபிடிக்கும் நத்தைக்கறி வியாபாரம்; எங்கு தெரியுமா? - காணொளி

காணொளிக் குறிப்பு, மழையில் சூடுபிடிக்கும் நத்தைக்கறி வியாபாரம் - எங்கு தெரியுமா? - காணொளி
மழைக்காலத்தில் சூடுபிடிக்கும் நத்தைக்கறி வியாபாரம்; எங்கு தெரியுமா? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

மழை சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு இடையூறு, மேலும் சிலருக்கு வாழ்வாதாரம்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர் தானய்யா. இவருக்கு மழைக்காலத்தில் மற்றொரு தொழிலும் உள்ளது — நத்தை இறைச்சி விற்பது.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் பேராவளியைச் சேர்ந்த தானய்யா, மழைக்காலங்களில் நத்தைகளைச் சேகரித்து, அவற்றின் ஓட்டினை உடைத்து, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்து வருகிறார்.

நத்தை இறைச்சி, பல பகுதிகளில் சமைத்து உண்ணப்படுகிறது.

இதுபற்றிக் கூறும் தானய்யா, “கால்வாயில நத்தைகளைச் சேகரித்து, அவற்றை உடைத்து இறைச்சியை விற்பனை செய்வேன். ஒரு இறைச்சிக் குவியலை 50 ரூபாய்க்கு விற்பேன்,” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)