You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேபாள நிலநடுக்கத்தில் இறந்த 13 பேர் மொத்தமாக தகனம் செய்யப்பட்ட துயரம்
நேபாளத்தின் ஜார்ஜாக்கோட் மாவட்டத்தில் உள்ள ச்சூரி கிராமத்தில் நிலநடுக்கத்தில் இறந்த பதிமூன்றுபேர் மொத்தமாக தகனம் செய்யப்பட்டத் துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அந்த இடத்திற்குச் சென்ற பிபிசி செய்தியாளர் ஸ்ரீஜனா ஷ்ரேஷ்டா இந்த பதிமூன்றுபேரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 6.4 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டவர்கள் என்றார்.
கிராமத்தில் இருந்த 186 வீடுகளும் நிலநடுக்கத்தால் சேதமடைந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண பணிகளுக்காக காத்திருக்கிறார்கள்.
நேபாள நிலநடுக்கத்துக்கு இதுவரை 157 பேர் பலியாகியுள்ளனர். 300 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பிபிசியுடன் பேசிய உள்ளூர்வாசிகள் தங்கள் உடைகள், படுக்கைகள், உணவு தானியங்கள் அனைத்தும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அவற்றை மீட்க முடியவில்லை என்றும் கூறினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)