காணொளி: லாஸ் ஏஞ்சலஸில் 5000 ஏக்கர் பரப்பில் பற்றி எரியும் காட்டுத்தீ

காணொளி: லாஸ் ஏஞ்சலஸில் 5000 ஏக்கர் பரப்பில் பற்றி எரியும் காட்டுத்தீ
பிரசுரிக்கப்பட்டது

லாஸ் ஏஞ்சலஸ் நகரின் வடமேற்கில் காட்டுத் தீ பற்றி எரிவதால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை பிற்பகல் வென்ச்சுரா மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் எல்லையில் காட்டுத் தீ பற்றியது. அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளாக 30 ஏக்கரிலிருந்து கிட்டத்தட்ட 5,400 ஏக்கர் அளவுக்கு காட்டுத் தீ பற்றியது.

வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 28 சதவிகிதம் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு