கத்தாரில் ஃபிஃபா உலக கோப்பை நடக்கும்போது அங்கு ஜாகிர் நாயக் சென்றது ஏன்?

காணொளிக் குறிப்பு, கத்தாரில் ஃபிஃபா உலக கோப்பை நடக்கும்போது அங்கு ஜாகிர் நாயக் சென்றது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் துவக்க விழாவிற்கு இந்தியா அழைக்கப்பட்டது. ஆனால் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் அங்கு வந்துள்ளார் என்ற தகவலைத் தொடர்ந்து அவரது வருகை தொடர்பான பல கேள்விகள் இந்தியாவில் எழுப்பப்படுகின்றன.

கத்தார் ஜாகிர் நாயக்கை அழைத்ததா இல்லையா என்பதை அந்த நாடு அதிகாரபூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ஜாகிர் நாயக்

ஆயினும் அவர் கத்தாருக்கு சென்றது குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: