டி20 உலகக் கோப்பை: வங்கதேசம், பாகிஸ்தான் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலியின் 'போலி ஃபீல்டிங்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
வங்கதேசத்துக்கு எதிரான இந்தியாவின் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றாலும் அவர் மீது வங்கதேச ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் கோபம் கொண்டிருக்கின்றனர்.
வங்கதேசத்துடனான போட்டியின்போது விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் எனப்படும் பேட்ஸ்மேன்களை திசை திருப்பும் உத்தியைப் பயன்படுத்தியதாகவும் இது ஐசிசி விதிகளுக்கு விரோதமானது என்றும் வங்கதேச ரசிகர்கள் ட்விட்டரில் விவாதித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான போட்டியில் கடைசி ஓவரில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இடுப்புக்கு மேலே ஃபுல் டாசாக வந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. அந்தப் பந்தை விராட் கோலி சிக்சருக்கு அனுப்பியதால் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது. அது நோபால் இல்லை என அப்போதே பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்த நிலையில், அதே விவாதம் வங்கதேச போட்டிக்குப் பிறகு ட்விட்டரில் ட்ரென்டானது.
தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய வீரர்களுக்கு திகிலூட்டிய வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் ஃபேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கோலி இதைச் செய்ததாக வங்கதேச ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.
என்ன நடந்தது?
இந்தியா நிர்ணயித்த 185 ரன்கள் இலக்கை நோக்கி வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டன் தாஸும், ஷான்டோவும் விரைந்து கொண்டிருந்தபோது 7-ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார் அப்போது லிட்டன் தாஸ் அடித்த பந்து அக்சர் படேலை நோக்கிச் சென்றது.

பட மூலாதாரம், Getty Images
பாயின்டில் நின்று கொண்டிருந்த விராட் கோலியை தாண்டி பந்து சென்றபோது, பந்தைப் பிடிக்காமலேயே பந்தைப் பிடித்தது போலவும், ஸ்டம்பை நோக்கி எறிவது போலவும் சைகை செய்தார். அந்த நேரத்தில் அம்பயர்களாக இருந்த கிறிஸ் பிரவுன் மற்றும் மரைஸ் எராஸ்மஸ் ஆகிய இருவரும் இதைக் கவனிக்கவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இப்படிச் செய்வது ஐசிசி விதிமுறகளுக்கு முரணானது என வங்கதேச ரசிகர்கள் வாதிடுகிறார்கள். ஐசிசியின் 41.5 -ஆவது விதியை வங்கதேச ரசிகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
வங்கதேச விக்கெட் கீப்பரின் குற்றச்சாட்டு
கோலி போலியாக ஃபீல்டிங் செய்த புகாரை ஆட்டம் முடிந்த பிறகு வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் எழுப்பினார். செய்தியாளரிடம் பேசிய அவர், "ஆடுகளம் ஈரமாக இருந்ததைப் பார்த்தோம். ஃபேக் த்ரோவும் நடந்தது. அதற்கு 5 ரன்கள் தண்டனையாகக் கொடுத்திருக்கலாம். அது எங்களுக்குச் சாதகமாக முடிந்திருக்கும். ஆனால் கெடுவாய்ப்பாக அது நடக்கவில்லை" என்று அவர் கூறினார்.
எதேச்சையாக 5 ரன்கள் வித்தியாசத்தில்தான் இந்திய அணி வங்கதேச அணியை வெற்றிகொண்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதற்கு முன் போலி ஃபீல்டிங்குக்காக கோபப்பட்ட கோலி
2017-ஆம் ஆண்டு இது போன்ற போலி பீல்டிங் செய்ததற்காக இலங்கை அணிக்கு தண்டனை வழங்கப்படாததற்கு அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி கோபப்பட்டிருக்கிறார்.
ஈடன் கார்டனில் நடந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது புவனேஷ்வர் குமார் கவர் திசையில் பந்தை அடித்துவிட்டார். அவர் இரண்டாவது ரன் எடுக்க முயற்சி செய்தபோது இலங்கை அணியின் சண்டிமால், பந்துக்கு அருகில் இல்லாத போதும் ஃபீல்டிங் செய்வதுபோலப் பாய்ந்தார். ஆயினும் நடுவர்கள் இதற்கு எதிராகத் தண்டனை வழங்கவில்லை. அதில் விராட் கோலி அதிருப்தியடைந்தார்.
வங்கதேச போட்டியிலும் 'நோ பால்' சர்ச்சை
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி ஆடியபோதும் நோபால் சர்ச்சை வெடித்தது. இந்தியா பேட்டிங்கில் 16-ஆவது ஓவரை ஹசன் முகமது வீசினார். அந்தப் பந்து பந்து பவுன்சராகச் சென்றது. அந்தப் பந்தை தட்டி விட்ட விராட் கோலி, ஸ்கொயர் லெக் அம்பயரிடம் நோபால் என்று சைகை செய்தார்.
இதைத் தொடர்ந்து அவரும் நோபால் என அறிவித்தார். அந்த நேரத்தில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனும் விராட் கோலியும் களத்தில் மோதினர். ஆனால் இருவரும் கட்டிப் பிடித்து, சிரித்து சமாதானம் ஆகினர். ஒரு நிமிடத்துக்கும் மேலாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.உண்மையில் ரன் எடுக்கும்போதே எதேச்சையாக இருவரும் மோதிக் கொண்டதாகக் தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் சமூக ஊடகங்களில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்த நோபால் குறித்தும் கடுமையாக விவாதித்து வருகிறார்கள்.
வங்கதேச ரசிகர்களுடன் இணைந்த பாகிஸ்தான் ரசிகர்கள்
பாகிஸ்தானுடனான போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெறுவதற்குக்க காரணமாக இருந்ததாக் கருதப்படும் நோபால் சர்ச்சை கடுமையாகப் பேசப்பட்ட நிலையில், தற்போதைய சர்ச்சையிலும் பாகிஸ்தான் ரசிகர்கள் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் போட்டியில் நடந்ததை நினைவுபடுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் போட்டியின்போது ட்ரென்டான 'சீட்டிங்' என்ற ஹேஷ்டேக்கும் இப்போது மீண்டும் ட்ரென்டாகி இருக்கிறது. அதாவது இந்திய அணி ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டது என்ற பொருளில் இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஈரமான ஆடுகளம் பற்றிய சர்ச்சை
வங்கதேசத்துடனான போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு மழையே முக்கியமான காரணம் என்றும், ஈரமான ஆடுகளத்தில் வங்கதேச அணி ஆட வேண்டியிருந்தது என்றும் சமூக ஊடகங்களில் வங்கதேச ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
போட்டியின்போதே மழை நின்றபிறகு ஈரமான ஆடுகளத்தைக் காட்டி வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
எனினும் இந்தச் சர்ச்சைகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் செய்யப்படவில்லை.
போட்டியில் என்ன நடந்தது?
விராட் கோலியின் பொறுப்பான ஆட்டம் வங்கதேசத்துடன் இந்தியா வெற்றி பெற உதவியது. மழை குறுக்கிட்ட ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்த இந்திய அணிக்கு எதிராக 16 ஓவரில் 151 ரன்கள் எடுக்க வேண்டும் என வங்கதேசத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தப் போட்டியில் விராட்கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 16 ரன்களை எடுத்திருந்தபோது உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு முன்பாக இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன 1016 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
இந்தப் போட்டியின் 19-ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த சிக்சர் 1998-ஆம் ஆண்டு டெண்டுல்கர் சார்ஜாவில் அடித்த சிக்சருடன் ஒப்பிடப்பட்டது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.
கடந்த மூன்று போட்டிகளிலும் சரியாக ஆடாத கே.எல். ராகுல் மீது கடுமையான விமர்சனம் இருந்த நிலையில், வங்கதேசத்துடனான போட்டியில் அவர் அந்த விமர்சனத்தைப் போக்கும் வகையில் சிறப்பாக ஆடினார். எனினும் மறு முனையில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த கே.எல். ராகுல் 32 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தபோது ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆடவந்த சூர்யகுமார் யாதவும் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஷாகிப் அலஹசன் பந்துவீச்சில் போல்டானார். பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா மீண்டும் ஒரு முறை ஏமாற்றினார். 5 ரன்களில் அவர் வெளியேறினார்.
இதன் பிறகு வந்த தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தாங்கிப் பிடித்த விராட் கோலி
ஆனால் மறுபுறம் விராட் கோலி பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் விறுவிறுப்பாகவும் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். அடிலெய்ட் மைதானத்தில் சராசரியாக எடுக்க வேண்டிய 170 ரன்கள் என்ற இலக்கை இதனால்தான் இந்தியாவால் தாண்ட முடிந்தது.
தொடக்கத்தில் சாதாரண வேகத்துடன் ஆட்டத்தைத் தொடங்கிய அவர் கடைசி ஓவர்கள் நெருங்கும்போது வழக்கமாகக் கையாளும் அதிரடி உத்தியைக் காட்டினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் அவர் 64 ரன்களை எடுத்திருந்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்
186 ரன்கள் இலக்குடன் ஆடத் தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே நெருக்கடி அளித்தார். 21 பந்துகளில் அரைச்சதத்தைக் கடந்த லிட்டன் தாஸ், தொடர்ந்து அதிடியாக ஆடினார்.
வங்கதேச அணி 7 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தபோது மழைகுறுக்கிட்டது. அந்த நேரத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியாவை விட 17 ரன்கள் அதிகம் எடுத்திருந்தனர். அன்த நேரத்தில் லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 59 ரன்களும் நஜ்முஸ் ஹுசைன் ஷான்டோ 16 பந்துகளில் 7 ரன்களும் எடுத்திருந்தனர்.
குறைக்கப்பட்ட ஓவர்கள்
மழை நீடித்திருந்ததால் ஆட்டம் 4 ஓவர்கள் குறைக்கப்பட்டு வங்கதேச அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு லிட்டன் தாஸ் ரன் அவுட் ஆனதால் வங்கதேசத்தின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்தன.

பட மூலாதாரம், Getty Images
கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், அந்த அணி வீரர்கள் 14 ரன்களை எடுத்தனர். இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் விராட் கோலி
நெருக்கடியான நேரத்தில் அரைச் சதம் அடித்து, விக்கெட்டை காப்பாற்றிய விராட் கோலிக்கு மீண்டும் ஒரு முறை ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. "இதை நான் எதனுடனும் ஒப்பிட விரும்பவில்லை. கடந்தபோனது போனதுதான். ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை நடக்கிறது என்றது கேள்விப்பட்டதில் இருந்தே, நல்ல கிரிக்கெட் ஷாட்கள்தான் முக்கியம் என்று உறுதியாக இருந்தேன்" என்றார் கோலி.

பிபிசி தமிழில் வெளியான சில சுவாரஸ்யமான கட்டுரைகள்
பெண்களைத் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்படும் கன்னித்திரை பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக் கதைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும்
மனிதர்கள் இறப்பது ஏன்?
சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.
மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?
இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர். பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். இதுபற்றிய சுவாரஸ்யமான கட்டுரை.
அதிசயக் கிணறு; தோண்டத் தோண்ட மர்மம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர். இந்தக் கிணறு பற்றித் தெரிந்து கொள்ள
மனிதர்கள் ஏன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்?
மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அவை என்னென்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள
உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?
ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அங்கு வயதானவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













