ஐசிசி மகளிர் உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா

பிரசுரிக்கப்பட்டது

உலகக் கோப்பை அரை இறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதிக்குள் நுழைந்தது.

தென்னாப்பிரிக்காவின் இறுதிக்கட்ட பேட்டிங்கின்போது, 48 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி, 6 விக்கெட்களை இழந்து, 261 ரன்களை எடுத்திருந்தது.

ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க, ஓவரின் ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் தென்னாப்பிரிக்கா சிங்கிள் ரன்களாக எடுத்துக் கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு 12 பந்துகளில் 14 ரன்கள் தேவையாக இருந்தது. கையில் நான்கு விக்கெட்டுகள் இருந்தன.

49-வது ஓவரில் முதல் 3 பந்துகளில் ஒவ்வொன்றிலும் சிங்கிள் ரன்களாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். டு ப்ரீஸ் பந்தைத் தரையை நோக்கியே அடித்துக் கொண்டிருந்தார். இறுதி ஓவரை தீப்தி ஷர்மா வீசினார்.

இறுதி ஓவரின் இரண்டாவது பந்தில் இரண்டாவது சிங்கிள் ஓடுவதற்கான டு ப்ரீஸின் அழைப்பைத் தொடர்ந்து செட்டி ரன் எடுப்பதற்காக ஓடியபோது ரன் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து வந்த இஸ்மாயில், டு ப்ரீஸுடன் இணைந்து ஆடினார். இருவரும் இரண்டு பந்துகளில் மூன்று ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் ஆடினார்கள். அந்த நேரத்தில் தீப்தி ஷர்மா போட்ட நோ பால் காரணமாக 2 பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது. இது இரண்டு தரப்பு ரசிகர்களிடையிலும் மிகுந்த பதற்றத்தை உண்டாக்கியது. 2 பந்துகளுக்கு இரண்டு ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது இஸ்மாயில் ஒரு ரன் எடுத்தார். ஒரேயொரு பந்து மட்டுமே மீதம் இருந்தது. தென்னாப்பிரிக்கா ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டு ப்ரீஸ் கடைசி ரன்னை எடுத்ததன் மூலம் தென்னாப்பிரிக்கா அணியை அரை இறுதிக்குள் அழைத்துச் சென்றார்.

இந்தியா உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியது. அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.

ஐசிசி உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்காவுடனான ஆட்த்தில் அந்த அணிக்கு 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஐசிசி மகளிர் உலக கோப்பையின் முக்கியமான போட்டியில் இந்திய அணிக்கு தொடக்கத்தில் ஏற்பட்ட இரண்டு பின்னடைவுகளுக்குப் பிறகு, ஸ்மிருதி மந்தனா மற்றும் மிதாலி ராஜ் களத்தில் இறங்கினார்கள். இன்றைய ஆட்டத்தில் ஷெஃபாலி வர்மாவைத் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா அரை சதத்தை கடந்தார்.

ஆனால், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு முதல் அடியாக, ஷெஃபாலி வர்மா 46 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார். பிறகு யஸ்திகா பாட்டியா இரண்டே ரன்களில் ஸ்டம்பிங் ஆனார். மந்தனா 84 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த நிலையில், கிளாஸின் பெளலிங்கில் ட்ரையோனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மிதாலி ராஜ் தென்னாப்பிரிக்காவின் மசபதா கிளாஸ் பெளலிங்கில் க்ளோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 83 பந்துகளில் 68 ரன்களை எடுத்திருந்தார்.

இதையடுத்து ஹர்மன்ப்ரீத் கவுர், பூஜா வஸ்திராகர் ஆடினார். ஹர்மன்ப்ரீத் அணியின் ஸ்கோரை முன்னேற்றும் முயற்சியில் மிதாலியுடன் கடைப்பிடித்த ஆட்ட உத்திகளை பூஜாவுடன் பயன்படுத்தி ஆட்டத்தைத் தொடர்ந்தார். பூஜா வஸ்திராகர் களமாடியபோதும் 7 பந்துகளில் மூன்று ரன்களை மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

களத்தில் என்ன நடக்கிறது?

இதையடுத்து ஹர்மன்ப்ரீத் கவுருடன் களமாடிய ரிச்சா கோஷ் 12 பந்துகளில் 9 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய ஸ்னேஹ் ராணா ஹர்மன் களமாடினார். ஆனால், இந்த இணை களமாடியபோது, அணியின் ஸ்கோரை மிதாலி, மந்தனாவுக்கு பிறகு மெதுமாக முன்னேற்றி வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 56 பந்துகளில் 48 ரன்களைக் குவித்து அவுட் ஆனார்.

இதையடுத்து ஸ்னேஹ் ராணா, தீப்தி சர்மா இணை களமாடினர். இதில் ஸ்னேஹ் ராணா நான்கு பந்துகளில் ஒரு ரன்னும் தீப்தி சர்மா இரண்டு பந்துகளில் இரண்டு ரன்களும் எடுத்த நிலையில், 50 ஓவரின் முடிவில் இந்திய அணி 274 ரன்களை எடுத்திருந்தது.

முன்னதாக, டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அரை இறுதிக்கு முன்னேற இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

இந்திய மகளிர் அணி தற்போது 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.

இந்தப் போட்டி முழுவதும் இந்தியாவின் ஆட்டம் சிறப்பாக இல்லை என்ற கருத்து உள்ளது. இருப்பினும், கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, இப்போது வேகத்தை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறது.

நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக மிதாலி ராஜ் உள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு சனாய் லீஸ் கேப்டனாக உள்ளார்.

மைதானத்தில் இருந்து பிபிசிக்காக தகவல்களை சேகரித்து வரும் பங்கேற்பு செய்தியாளர் ஹேமந்த் குஷ்வாஹா, இந்த போட்டியைக் காண வரும் ரசிகர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை காண்பித்தால் மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

பெண்கள் அணியின் உற்சாகத்தை அதிகரிக்க பல இந்திய ரசிகர்கள் மைதானத்துக்கு வந்துள்ளனர், அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள் அரிதாகவே காணப்படுகின்றனர் என்று மேஹமந்த் குஷ்வாஹா தெரிவித்தார்.

மேட்ச் ஸ்கோர்கார்டை இங்கே பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: