கிறிஸ் கேர்ன்ஸ்: நியூசிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் உடல்நிலை எப்படி உள்ளது?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

நியூசிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் கிறிஸ் கேர்ன்ஸ் இதய அறுவை சிகிச்சை ஒன்றுக்கு பிறகு சிட்னியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேர்ன்ஸுக்கு வயது 51. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது செயற்கை சுவாச உதவியுடன் ஆஸ்திரேலிய தலைநகரான கேன்பராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் மனைவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரார்த்தனை செய்தவர்களுக்கும், கனிவுடன் நலம் விசாரித்தவர்களுக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

தமது தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சிறந்த ஆல் ரவுண்டர் கிரிக்கெட் வீரராக கருதப்பட்ட கேர்ன்ஸ், இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளிலும், 215 ஒருநாள் போட்டிகளிலும், 1989 மற்றும் 2006 காலகட்டங்களில் நியூசிலாந்து அணிக்காக இரு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதன்பின் தொலைக்காட்சி வருணனையாளராக இருந்துள்ளார்.

இவரின் தந்தை லான்ஸும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர்.

"கிறிஸ் கேர்ன்ஸின் மருத்துவ அவசரநிலை குறித்து மிகவும் கவலையடைந்தோம்" என நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பின் தலைமை நிர்வாகி டேவிட் ஒயிட் தெரிவித்துள்ளார்.

"ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது குடும்பத்தினர் குறித்தும், நியூசிலாந்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். கிறிஸ் மிகவும் நேசிக்கப்பட்ட கணவர், தந்தை மற்றும் மகன். அதுமட்டுமில்லாமல் எங்களின் சிறந்த ஆல் - ரவுண்டர்களில் ஒருவர். அவர் பரிபூரணமாக குணமடைவார் என நாங்கள் நம்புகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்ற பிறகு கான்ஸ், இந்தியாவில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சண்டிகர் லயன்ஸ் அணியின் கேப்டனாக மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட சர்ச்சையில் சிக்கினார்.

இருப்பினும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்தார் கிறிஸ். அதை நிரூபிக்க பல வழக்குகளை சந்தித்தார். முன்னாள் இந்திய பிரீமியர் லீக்கின் முன்னாள் தலைவர் ல்லித் மோதிக்கு எதிரான அவதூறு வழக்கு ஒன்றில் 2012ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :