You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜாதியை கூறி சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் ரெய்னா - வைரலாகும் காணொளி
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வருணனை நேரலையின்போது "நானும் பிராமணன் தான்" என்று ஜாதியை கூறி தன்னை அடையாளப்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் சுரேஷ் ரெய்னா பேசிய காணொளியும் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே திங்கட்கிழமை நடந்த துவக்க ஆட்டத்தின்போது, இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா வருணனையில் சேர அழைக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே இந்திய ப்ரீமியர் லீக் போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார்.
இந்த நிலையில், இவர் நேரலை வருணனையில் என்ன பேசினார், அது எப்படி சர்ச்சையானது என்பதை விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- சிங்கப்பூர் பள்ளியில் 13 வயது சிறுவன் கொலை - 16 வயது சிறுவன் கைது
- '12,000 ஆண்டுகள் இந்திய பண்பாட்டின் வரலாறை ஆராயும் குழு மாற்றி அமைக்கப்படும்'
- நிலவில் மனிதன் கால் பாதித்தது உண்மையில் நிகழ்ந்ததா? எல்லாம் நாடகமா?
- Monkey B Virus: சீனாவில் ஒருவர் பலி - அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
- ஆபாசப் படம் எடுத்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்