You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடராஜனுக்கு டெஸ்ட் போட்டி வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு சிக்கல் - என்ன காரணம்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துளளது.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. மேற்கொண்டு உமேஷ் யாதவால் விளையாட முடியாத காரணத்தால் அவருக்கு பதிலாக தற்போது நடராஜன் சேர்க்கப்ட்டுள்ளார். முன்னதாக முகமது ஷமிக்கு பதிலாக ஷரதுல் தாக்கூர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவது தொடர் கதையாகி வருகிறது. இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் என வேகப்பந்து படை தத்தளித்து வருகிறது. இந்த நிலையில்தான் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவாரா என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியவரும்.
கடந்த செப்டம்பர் மாதம் சன் ரைசர்ஸ் அணியில் அறிமுகமான நடராஜன் ஐபிஎல்லில் சிறப்பாக பங்களித்ததன் மூலம் ஆஸ்திரேலியா தொடரில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் ஒருநாள், டி20 தொடர்களிலும் சேர்க்கப்பட்டார். நடராஜன் இந்திய அணிக்கு ஒரு துருப்புச் சீட்டாக உருவெடுத்தார். இந்தநிலையில் தான் டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி ஏழாம் தேதி சிட்னியில் தொடங்கவுள்ளது.
உமேஷ் யாதவின் காயம் ஆறாத நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு குழந்தை பிறந்திருப்பதால், சிசுவை பார்க்க அவர் இந்தியா திரும்புகிறார்.
ஆம் இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோர் களமிறங்கவிருக்கும் நிலையில், அடுத்த பவுலர் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அனேகமாக அந்த வாய்ப்பு ஷரத்துல் தாகூருக்கு கிடைக்கலாம் என தகவல் உள்ளது. முதல் தர போட்டிகளில் நடராஜன் பெரிய அளவில் ஆடியது இல்லை என்பதால், அந்த வாய்ப்பு ஷரத்துல் தாகூருக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.
பிற செய்திகள்:
- கிரிப்டோ கரன்சிக்கு இந்தியாவில் பெருகி வரும் திடீர் வரவேற்பு - ஏன் தெரியுமா?
- கொரோனா தடுப்பூசி போட நாளை ஒத்திகை - களப்பயிற்சிக்கு தயாராகும் மாநிலங்கள்
- டெல்லி குளிர் 1 டிகிரிக்கு சென்றது: 15 ஆண்டுகளில் இல்லாத நடுக்கம்
- உள் உறுப்புகள் சிதையாமல் கிடைத்தது 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கின் உடல்
- பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்