You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது இந்திய அணி. 315 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய வங்கதேசம் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ரோகித் ஷர்மா அதிரடி சதமடித்து ஆட்டமிழந்தார்

    தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 90 பந்துகளில் சதமடித்தார்.

    இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் ஷர்மா அடிக்கும் நான்காவது சதம் இது.

    தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக முன்னதாக சதம் அடித்திருந்தார்.

    ஆறு பௌண்டரிகள் ஐந்து சிக்ஸர்கள் உதவியுடன் சதம் விளாசியுள்ளார் ரோகித்.

    உலகக்கோப்பையில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஐந்து சதம் விளாசியுள்ளார் ஒருநாள் போட்டிகளில் ரோகித்தின் 26-வது சதம் இது.

    உலகக்கோப்பை தொடர்களில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இணை எனும் பெருமையை பெற்றுள்ளது ரோகித் - ராகுல் இணை.

    சவுமியா சர்க்கார் பந்தில் ரோகித் ஷர்மா லித்தன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் ஸ்கோர் 180.

  2. தோனியை முந்தினார் ரோகித் ஷர்மா

    ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனியை முந்தினார் ரோகித் ஷர்மா.

    • அப்ரிடி - 351 சிக்ஸர்கள்
    • கெய்ல் - 326 சிக்ஸர்கள்
    • ஜெயசூர்யா - 270 சிக்ஸர்கள்
    • ரோகித் ஷர்மா - 230 சிக்ஸர்கள்
    • தோனி - 228 சிக்ஸர்கள்
  3. ரோகித், ராகுல் அரை சதம்

    ஆட்டத்தின் 15-வது ஓவரில் ரோகித் ஷர்மா அரை சதம் கடந்தார்.

    19-வது ஓவரில் கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார்.

    22 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்துள்ளது.

    ரோகித் ஷர்மா இதுவரை ஐந்து பௌண்டரி நான்கு சிக்ஸர்கள் உதவியுடன் 75 ரன்கள் குவித்துள்ளார்.

    கே.எல்.ராகுல் 66 பந்துகளில் 61 ரன்கள் எடுத்துள்ளார்.

  4. முஸ்தாஃபிசுர் ஓவரில் 12 ரன்கள்

    ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரை முஸ்தாஃபிசுர் வீசினார். ஓவரின் இரண்டாவது பந்தை நோ பாலாக வீசினார் முஸ்தாஃபிசுர். ரோகித் அந்த பந்தை பௌண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் இந்தியா 12 ரன்கள் குவித்தது.

    10 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தது.

    இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் பவர்பிளேவில் இந்தியா அதிக ரன்கள் குவித்தது இப்போட்டியில்தான். முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியபோது முதல் பத்து ஓவர்களில் 53 ரன்கள் குவிந்திருந்தது.

    மான்செஸ்டரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் குவித்தது

  5. அரை இறுதிக்குத் தகுதி பெறுமா இந்தியா?

    இந்திய அணி அரை இறுதியை இன்னும் முழுமையாக உறுதி செய்ய வில்லை.

    இந்திய அணி இப்போட்டியில் வென்றால் அரை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற முடியும். ஒருவேளை இப்போட்டியில் தோற்றாலும் இந்தியா ஜூலை ஆறாம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியில் வெல்லும் பட்சத்தில் அரை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறமுடியும்.

    இந்தியா வங்கதேசம் மற்றும் இலங்கை வெல்லும் பட்சத்தில், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவிடம் ஒருவேளை தோல்வியைத் தழுவினால் 15 புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க முடியும்.

    இந்திய அணி முதலிடம் பிடிக்கும் பட்சத்தில் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கும் சூழல் உருவாகாது.

  6. ரோகித் கொடுத்த கேட்சை கோட்டை விட்டது வங்கதேசம்

    முஸ்தாபிசுர் பந்துவீச்சில் ரோகித் ஷர்மா கொடுத்த எளிமையான கேட்சை தமீம் இக்பால் கோட்டை விட்டார்.

    ஐந்தாவது ஓவரின் நான்காவது பந்தில் புல் ஷாட் ஆடினார் ரோகித். வங்கதேச வீரர் தமீம் இக்பால், ரோகித் கொடுத்த கேட்சை கோட்டை விட்டார்.

    இந்திய அணி 7 ஓவர்களில் 36 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 21 இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி உதவியோடு 23 ரன்களை குவித்து விளையாடி வருகிறார்.

    மறுமுனையில் லோகேஷ் ராகுல் 21 பந்துகளில் 11 ரன்கள்.குவித்துள்ளார்.

  7. முதல் ஓவரில் 10 ரன்கள்

    லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். இந்தியா முதல் ஓவரில் 10 ரன்கள் எடுத்துள்ளது.

  8. இந்தியா முதலில் பேட்டிங்

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.