12 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள்
தொடக்க வீரர் கே.எல். ராகுல் 38 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அணித்தலைவர் விராட் கோலி 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 268 ரன்கள் குவித்த போதிலும், அணியின் பெரும் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றது பந்துவீச்சாளர்களே.
தொடக்க வீரர் கே.எல். ராகுல் 38 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அணித்தலைவர் விராட் கோலி 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
மேற்கிந்திய வேகப்பந்துவீச்சாளர் கேமர் ரோச் வீசிய 6-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட்கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே. எல். ராகுல் ஆகிய இருவரும் நிதானமாக பேட்டிங் செய்து வருகின்றனர். 5 ஓவர்களின் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுலும், ரோகித் ஷர்மாவும் களமிறங்கியுள்ளனர்.
ஆட்டத்தின் முதல் ஓவரில் இந்திய அணி நான்கு ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (வியாழக்கிழமை) மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போட்டியிடுகின்றன.