இந்தியா நிதான ஆட்டம், ஓவர் -12, ரன்கள் - 55/0
இந்திய அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்கவில்லை. நிதானமான ஆட்டத்தை கையாண்டு வருகிறது.
ரோகித் ஷர்மா 33 பந்துகளில் 19 ரன்கள் எடுத்துள்ளார். ஷிகர் தவான் 39 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
கோல்டர் நைல் வீசிய எட்டாவது ஓவரில் தவான் 13 ரன்கள் குவித்தார். இதில் மூன்று பௌண்டரிகள் அடங்கும்.
தவான் இதுவரை இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் மூன்று சதம், நான்கு அரை சதம் விளாசியுள்ளார்.