தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. கொரோனா பரவல் தொடரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை, பாதுகாப்பாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெறுகிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.