புதிய உச்சத்தில் தங்கம் விலை

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தினஅ விலை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பட்டியல், பழங்குடியினருக்கு தனி வங்கி - விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை

    திருமாவளவன்

    பட மூலாதாரம், Thol Thirumavalavan / Facebook

    தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    அந்தக் கட்சியின் நிறுவனரும், தலைவருமான திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் நிலையில், தேர்தலுக்கான அறிக்கையை இன்று அக்கட்சி வெளியிட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்,

    • கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்
    • ராமர் கோவில் கட்டுமானத்தில் ஊழல் நடந்துள்ளதா என விசாரணை நடத்த விசிக வலியுறுத்தும்
    • ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவியை ஒழிக்க மத்திய அரசை விசிக வலியுறுத்தும்
    • ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தும்
    • அம்பேத்கர் பிறந்தநாள் அறிவுத்திருநாளாக அறிவிக்க வலியுறுத்தும்
    • வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்
    • 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த குரல் கொடுக்கும்
    • பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி நிறுவ வலியுறுத்தப்படும்
    • ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர குரல் எழுப்பப்படும்
  2. சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கம்

  3. அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக கண்டுபிடிப்பு

    அராபத்

    பட மூலாதாரம், X

    அமெரிக்காவில் கடந்த மாதம் காணாமல் போன 25 வயது இந்திய மாணவர் முகமது அப்துல் அராபத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் சடலமாகக் கிடந்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அராஃபத்தை தேடும் பணியை செய்து கொண்டிருப்பதாகக் கூறியிருந்தது.

    நியூயார்க்கை தளமாகக் கொண்ட இந்தியத் துணைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முகமது அப்துல் அராபத், ஓஹியோவின் கிளீவ்லேண்டில் இறந்து கிடந்ததை அறிந்து வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். முகமது அப்துல் அராஃபத்தின் மரணம் குறித்து முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக உள்ளூர் நிறுவனங்களுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. அவரது அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு வர அவரது குடும்பத்தினருக்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளது.

    ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான அப்துல் முகமது அராபத், கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புக்காகச் சென்றிருந்தார். கடந்த மாதம் அவர் காணாமல் போனார். 1200 டாலர்கள் கொடுத்து மீட்டுக் கொள்ளும்படி அவரது தந்தைக்கு அழைப்பு வந்தது.

    இந்த ஆண்டு அமெரிக்காவில் பல இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் 5 ஆம் தேதி, ஓஹியோவில் இந்திய மாணவி உமா சத்ய சாய் காடே இறந்ததை இந்திய துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியது.

    மார்ச் 18 அன்று, இந்திய மாணவர் அபிஜீத் பருச்சுரு பாஸ்டனில் இறந்தார்.

  4. "எந்தக் கட்சியும் நல்லது செய்யவில்லை" - 30 ஆண்டுகளாக வீடு கோரி காத்திருக்கும் மத்திய சென்னை மக்கள்

  5. 75,000 புள்ளிகளை முதல்முறையாக எட்டியது சென்செக்ஸ்

    பங்குச் சந்தை

    பட மூலாதாரம், Getty Images

    முதல் முறையாக, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் 75000 என்ற வரலாற்று சாதனையை கடந்துள்ளது.

    இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டெண் நிஃப்டி 22,765.30 என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.

    இந்த சந்தை சாதனையை எட்டியதில் ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளது.

    இந்த வர்த்தக தொடக்கத்தில் இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளன.

  6. நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    பட மூலாதாரம், EDAPPADI FACEBOOK

    பாமகவுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலைப்பாடு இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை 3 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தேர்தலுக்காக மீண்டும் நிறைவேற்றுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார் என எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்காக அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாட்டுத்தாவணி காய்கறி, பழ சந்தைகளில் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "அதிமுகவுக்கு ஒரே நிலைப்பாடு. அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். பிடித்தம் இல்லாமல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுத்தோம். அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் கொடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஸ்டாலின் அதை நடைமுறைப்படுத்தவில்லை. சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது, அதை வாயில் போட்டால் தான் இனிக்கும். 3 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் இப்போது தேர்தல் வந்தவுடன் சொல்கிறார். இது திமுகவின் வாடிக்கை.”

    “திராவிட கட்சிகளால் எந்த பயனும் இல்லையென்றால் அன்புமணி ஏன் எங்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டிருந்தார்? ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கு ஒவ்வொரு நிலைப்பாடு. நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக.” என்று அவர் கூறினார்.

  7. சூரிய கிரகணம்: பகல் நேரத்தில் அமெரிக்கா இருளில் மூழ்கிய நிசப்தமான தருணம் - கண்ணைக் கவரும் புகைப்படங்கள்

  8. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு

    கவிதா

    பட மூலாதாரம், Getty Images

    டெல்லியின் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகளுமான கே.கவிதாவின் ஜாமீன் மனு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

    சட்டப்பூர்வ விவகாரங்கள் குறித்த செய்திகளை வெளியிடும் பார் & பெஞ்ச் இணையதளம் வெளியிட்ட செய்தியின்படி, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா திங்களன்று (ஏப்ரல் 8) பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சி கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

    கவிதாவை ஐதராபாத்தில் இருந்து அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் மார்ச் 15 அன்று கைது செய்தனர். அவர் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார்.

    டெல்லி மதுக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங்குக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் தற்போது திகார் சிறையில் உள்ளனர்.

  9. “நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை” - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நடிகை கங்கனா ரனாவத்

    கங்கனா

    பட மூலாதாரம், Getty Images

    நடிகை கங்கனா ரணாவத்தை ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.

    “கங்கனா மாட்டிறைச்சி சாப்பிடுவார், அவருக்கு பாஜக இப்போது மக்களவைத் தேர்தலுக்கான சீட்டை வழங்கியுள்ளது” என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறியிருந்தார்.

    காங்கிரஸ் தலைவரின் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, நடிகை கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதில் பதிவை வெளியிட்டுள்ளார்.

    “நான் மாட்டிறைச்சி அல்லது எந்த வகையான சிவப்பு இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. என்னைப் பற்றி முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவது வெட்கக்கேடானது. நான் பல ஆண்டுகளாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை மக்களிடம் ஊக்குவித்து வருகிறேன்.

    இதுபோன்ற தந்திரங்கள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாது, ஏனென்றால் நான் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள், அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது. ஜெய் ஸ்ரீராம்" என அந்த பதிவில் கூறியுள்ளார்.

  10. “காங்கிரஸ் தோற்றால், ராகுல் காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்” - பிரஷாந்த் கிஷோர் பேச்சு

    பிரசாந்த் கிஷோர்

    பட மூலாதாரம், Getty Images

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றால், ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

    செய்தி நிறுவனமான பிடிஐயிடம் பேசிய அவர், “உண்மையில் ராகுல் காந்தி தான் கட்சியை நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அவரால் அரசியலில் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, கட்சி தலைமையிலிருந்து பின்வாங்கவோ அல்லது காங்கிரஸின் தலைமைப் பதவியை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்கவோ அவர் தயாராக இல்லை.

    என்னைப் பொறுத்தவரை இது ஜனநாயக விரோதமானது” என்றார்.

    காங்கிரஸ் கட்சிக்கான ஒரு மறுமலர்ச்சி திட்டத்தை பிரசாந்த் கிஷோர் வகுத்திருந்தார். ஆனால் சில விஷயங்களில் கட்சித் தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒதுங்கிக் கொண்டார்.

    “அரசியலில் கடந்த 10 வருடங்களாக ஒரே வேலையைச் செய்தும் வெற்றி பெறவில்லை என்றால், ​​ஓய்வு எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. உங்கள் அம்மா விட்டுக் கொடுத்தது போல் நீங்களும் ஐந்தாண்டுகளுக்கு உங்கள் இடத்தை வேறு யாருக்காவது கொடுக்க வேண்டும்” என்றார் பிரசாந்த் கிஷோர்.

    தனது கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, 1991இல் பி.வி.நரசிம்ம ராவிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, 1997 வரை அரசியலில் இருந்து விலகியே இருந்தார் சோனியா காந்தி.

  11. நேரலைப் பக்கத்துக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகளை இந்தப் பக்கத்தில் படிக்கலாம்.