புதிய உச்சத்தில் தங்கம் விலை

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தினஅ விலை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

  2. மகளின் காதலனை கொலை செய்ததாக தந்தை - மகன் கைது

    மதுரை
    படக்குறிப்பு, கொலை வழக்கில் சரணடைந்த தந்தை - மகன்

    மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(28). இவர் உள்ளூரில் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இவருடைய உறவினரான மணி என்பவரின் மகளை, கார்த்திக் காதலித்துள்ளார். இந்த காதலுக்கு பெண்ணின் தந்தையான மணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

    எதிர்ப்பையும் மீறி இருவரது காதல் தொடர்ந்ததால், பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் தந்தை மணி இருவரும் கார்த்திக்கிடம் பேச முயற்சி செய்துள்ளனர்.

    பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறி, தந்தையும் மகனும் சேர்ந்து கார்த்திக்கை கத்தியால் உடலின் பல பகுதியில் குத்தியுள்ளனர்.இதில் காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

    இந்த கொலை தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் கார்த்திக்கை கொலை செய்த மணி மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை அதிகாரி கூறும்போது, "இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், கார்த்திக் கூலி வேலை செய்பவர் என்ற காரணத்தால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கொலை நடந்துள்ளது," என்று தெரிவித்தார்.

    அவனியாபுரம் காவல்நிலையத்தில் சரணடைந்த இருவர் மீது. ஐபிசி 302, 294B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  3. தங்கம் விலை உயரும் நேரத்தில் நகை வாங்குவது நல்லதா?

  4. புதிய உச்சத்தில் தங்கம் விலை

    தங்கம்

    பட மூலாதாரம், Getty Images

    சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு சவரனுக்கு 280 ரூபாய் வரை குறைந்தது.ஆனால் இந்த போக்கு மீண்டும் மாறி, தங்கத்தின் தினசரி அதிகரித்து வருகிறது.

    சென்னையில் இன்றைய ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 6,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல சவரனுக்கு 54,440 ரூபாய் தங்கத்தில் விலை விற்பனை ஆகிறது. நேற்றைய விலையில் இருந்து தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 80 ரூபாயும், சவரனுக்கு 640 ரூபாயும் அதிகரித்துள்ளது.

  5. பிபிசிக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி: ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளரா?

  6. மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை அரியலூருக்கு வந்துவிட்டதா? எப்படி சாத்தியமாகும்?

  7. பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது ஏன்? எப்படிக் கட்டுப்படுத்துவது?

  8. வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?

  9. மோதியை சந்திக்கும் ஈலான் மஸ்க்

    ஈலான் மஸ்க் நரேந்திர மோதி

    பட மூலாதாரம், Getty Images

    டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க, இந்தியாவிற்கு வரவுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ஆனால் எந்த தேதியில் இந்தியாவிற்கு வருகிறார் என மஸ்க் தரப்பில் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்தியாவிற்கு வரும் ஈலோன் மஸ்க், மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான தனது டெஸ்லா நிறுவனத்தின் இந்திய முதலீடு குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச மின்சார வாகன உற்பத்தியாளர்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், கடந்த மாதம் இந்தியா ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

    500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில், மின்சார கார்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா குறைத்தது. இதன் மூலம் இந்தியாவில் கார் உற்பத்தியை இந்த நிறுவனங்கள் தொடங்கி உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறது.

    கடந்த 2021ஆம் இந்தியாவில் இருக்கும் இறக்குமதி வரி சுமையால் டெஸ்லா கார்கள் இந்திய சந்தைக்கு கொண்டு வரமுடியவில்லை என்று ஈலோன் மஸ்க் கூறியிருந்தார்.

    பிபிசியிடம் பேசிய இந்திய அரசின் மூத்த அதிகாரி, பிரதமர் மோதி, ஈலோன் மஸ்க் இடையிலான இந்த சந்திப்பு ஏப்ரல் கடைசி வாரத்தில் நடக்கவுள்ளதாகவும், பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கும் என்று கூறினார்.

    இந்த சந்திப்பிற்கு பிறகு, இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடுகள் குறித்து அறிவிப்பு வெளியானால் அது ஆளும் பாஜக அரசுக்கு தேர்தலில் சாதகமாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  10. தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

  11. இந்திய, இலங்கை இளைஞர்களை கடத்தி சைபர் அடிமையாக்கும் கும்பல் - உலகையே அச்சுறுத்துவது எப்படி?

  12. ‘மக்கள் புரிந்துகொள்ளும்போது திமுக செல்லாக்காசு ஆகிவிடும்’ – வேலூரில் பிரதமர் மோதி

    ‘மக்கள் புரிந்துகொள்ளும்போது திமுக செல்லாக்காசு ஆகிவிடும்’ – வேலூரில் பிரதமர் மோதி

    பட மூலாதாரம், Narendra Modi/X

    பாஜக சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று பிரதமர் மோதி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோதி மக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “தமிழில் பேசாததற்கு என்னை மன்னிக்கவும். வேலூரில் இவ்வளவு எழுச்சியான கூட்டம் இருப்பதை டெல்லியில் இருந்து அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு இருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு எனது அத்தனை உழைப்புகளையும் உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

    வேலூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிகப்பெரிய புரட்சி நடந்துள்ளது. அதேபோல் மீண்டும் வேலூர் நகரத்தில் ஒரு புரட்சி நடக்கப் போகிறது.

    தமிழகத்தில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழகமும் மீண்டும் மோதி அரசு எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது,” என்று கூறினார்.

    ‘மக்கள் புரிந்துகொள்ளும்போது திமுக செல்லாக்காசு ஆகிவிடும்’ – வேலூரில் பிரதமர் மோதி

    பட மூலாதாரம், Narendra Modi/X

    மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது இந்தியாவுக்கான நல்லதொரு அடித்தளத்தைத் தயார் செய்துள்ளதாகக் கூறிய அவர், “2014ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என அனைவருக்கும் தெரியும். பொருளாதார வளத்தில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட நாடாக இருந்தது. இந்தியாவில் நடைபெறுகின்ற மோசடிகள், ஊழல்கள் பற்றி மட்டுமே செய்திகள் வந்துகொண்டிருந்தன.

    இந்தியாவின் பொருளாதாரம் என்றைக்கு வீழ்ச்சியடையும் என்று உலக நாடுகளிடையே பேசப்பட்டு வந்த நிலையில் இதற்கு முன்பிருந்த அரசாங்கம் அதைச் செய்து வந்துள்ளது. இந்தியா வல்லரசு நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. அதில் தமிழகம் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது.

    இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் அமைந்துள்ள ராணுவ பாதுகாப்பு உற்பத்தி மையங்கள் தளவாடங்கள் உற்பத்தி செய்வதில் இந்தியாவை மிகப்பெரிய உயரத்திற்குக் கொண்டு செல்லும். என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

    ‘மக்கள் புரிந்துகொள்ளும்போது திமுக செல்லாக்காசு ஆகிவிடும்’ – வேலூரில் பிரதமர் மோதி

    பட மூலாதாரம், Narendra Modi/X

    அதோடு, தமிழர்களின் திறமைகள் அனைத்தும் இந்தியாவின் வலுவான சூழல்களுக்கு மிகவும் உதவியாக உள்ளதாகவும் வேலூரில் விமானம் நிலையம் அமைப்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோதி தெரிவித்தார்.

    வேலூரில் விமான நிலையம் அமைப்பது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இப்பகுதியில் உள்ள ரயில்வே துறையின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு பணிகளைச் செய்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

    தமிழகம் வளர்ந்த இந்தியாவை வழிநடத்தக்கூடிய நேரம் இது எனத் தெரிவித்த அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

    ‘மக்கள் புரிந்துகொள்ளும்போது திமுக செல்லாக்காசு ஆகிவிடும்’ – வேலூரில் பிரதமர் மோதி

    பட மூலாதாரம், Narendra Modi/X

    திராவிட முன்னேற்றக் கழகம் பழைய சிந்தனையில் இருந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் பல அரசியல்களைச் செய்து அத்தனை பேரையும் இதில் சிக்க வைக்க முயற்சி செய்து கொண்டுள்ளது.

    ஒட்டுமொத்த திமுகவும் திமுக நிறுவன சொத்தாக மாறிவிட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திமுகவின் குடும்ப அரசியல் காரணமாக தமிழக இளைஞர்கள் இங்கு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை என்பதை.

    திமுகவினர் மூன்று முக்கிய கொள்கையை அரசியல் கொள்கையாகவைத்துள்ளனர். பெரிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருக்க வேண்டும். ஊழல் மிகப்பெரிய அளவுகோலாக உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் கலாசாரத்தை எதிர்க்க வேண்டும். இதை வைத்துக் கொண்டு திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

    திமுகதான் ஊழல் அனைத்தையும் செய்து வருகிறது. திமுகவில் உள்ள குடும்பங்கள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதை வேலையாக வைத்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4600 கோடிகள் மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

    ‘மக்கள் புரிந்துகொள்ளும்போது திமுக செல்லாக்காசு ஆகிவிடும்’ – வேலூரில் பிரதமர் மோதி

    பட மூலாதாரம், Narendra Modi/X

    தமிழ்நாடு முழுவதும் எந்த அளவிற்கு திமுக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

    மத்திய அரசு ஆயிரம் கோடிக்கு மேல் அனுப்பி கொண்டிருக்கிறோம். ஆனால், திமுக அதில் ஊழல் செய்து கொண்டிருக்கிறது. திமுகவால் பள்ளிக் கூடங்கள் கஞ்சா கூடாரமாக மாறி சிறு பிள்ளைகளின் வாழ்க்கை அழிந்து வருகிறது. திமுகவினர் மொழி, மதம் என்ற பெயர்களால் பிரிவினை செய்து கொண்டிருக்கிறார்கள். சாதிரீதியாக, மதரீதியாக திமுகவினர் பிரித்து ஆளுகின்ற செயலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை மக்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ அன்றைக்கு திமுகவினர் செல்லாக் காசாக மாறிவிடுவார்கள்,” என்று கடுமையாக விமர்சித்தார்.

    மேலும், “நாடாளுமன்றத்தில் புனிதமான செங்கோலை வைக்கின்றபோது திமுக புறக்கணித்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    பாரதிய ஜனதா கட்சி தூக்கு தண்டனை பெற்ற இலங்கையில் ஐந்து பேரை விடுவித்துக் கொண்டு இங்கே வந்திருக்கிறது. காங்கிரஸ் மற்றும் திமுக தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    சனாதனத்தை அழிப்பதாக காங்கிரசும் திமுகவும் பேசிக்கொண்டு வருகின்றனர். ராமர் கோவிலைப் புறக்கணிப்பதாகப் பேசிக்கொண்டு வருகின்றனர்,” என்று பிரதமர் நரேந்திர மோதி வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

  13. விருதுநகர்: சிவகாசியை உள்ளடக்கிய 'கந்தக' பூமியில் மும்முனைப் போட்டி - முந்துவது யார்?

  14. பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: தபால் வாக்கு செலுத்த மறுத்து அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

    பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: தபால் வாக்கு செலுத்த மறுத்து அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

    காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தபால் வாக்குப் பதிவு பணிக்காக 15 குழுவினர்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று தபால் வாக்குப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் மாவட்ட தேர்தல் நிர்வாகம் வாக்குப்பதிவு ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது. இந்நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு அதன் பேரில் திங்கள் முதல் தபால் வாக்குப் பதிவு நேரடியாக வீட்டுக்குச் சென்று பெறப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் திங்கள் முதல் துவங்கப்படும் இந்த தபால் வாக்குப் பதிவு வரும் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புத்தூரில் ஐந்து குழுவினரும், ஆலந்தூரில் நான்கு குழுவினரும்,காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூரில் தலா மூன்று குழுவினரும் என மொத்தம் 15 குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊர் மக்கள் பல்வேறு வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் 624வது நாளை எட்டிய நிலையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், தபால் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள வயதானவர்களிடம் சென்று வாக்களிக்குமாறு கூறினர். ஆனால், வயதானவர்கள் யாரும் வாக்களிக்கத் தயாராக இல்லை எனக் கூறி அதிகாரிகளைத் திருப்பி அனுப்பினர். ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  15. பதஞ்சலி நிறுவனத்தின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் இரண்டாவது முறையாக மறுப்பு

    பதஞ்சலி நிறுவனம், ராம்தேவ்

    பட மூலாதாரம், ANI

    பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் யோகா குரு ராம்தேவ் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பால்கிருஷ்ணா ஆகியோர் கோரிய மன்னிப்பை உச்ச நீதிமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது.பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனு மீது இந்த விசாரணை இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 10) நடைபெற்றது.இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.நீதிபதி ஹிமா கோலி, “அவர்கள் மன்னிப்பு கேட்டதில் எங்களுக்கு திருப்தி இல்லை,” என்றார்.கடந்த விசாரணையில், ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரின் மன்னிப்பை நிராகரித்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்குமாறு கூறியிருந்தது. மேலும் ராம்தேவ் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்றும் நீதிமன்றம் கேட்டிருந்தது.இந்த இரு வழக்குகளின் விசாரணையும் இன்று நடைபெற்றது.ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா அளித்த இரண்டாவது பிரமாணப் பத்திரத்தில், "நாங்கள் இந்த விஷயத்தில் தாராளமாக இருக்க வேண்டியதில்லை," என்று உச்ச நீதிமன்றம் கூறியது.பதஞ்சலியின் தவறான விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்காத உத்தரகாண்ட் அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. "சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, [அவர்களை] எச்சரித்ததாக மாநில உரிமை ஆணையம் மத்திய அரசுக்குத் தெரிவித்து வருகிறது," என்று நீதிமன்றம் கூறியது.கடந்த விசாரணையில், ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.நீதிபதி ஹிமா கோலி மற்றும் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோரிடம், "நீதிமன்றத்தில் கொடுத்த வார்த்தைக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும், ஒவ்வொரு வரம்பையும் தாண்டிவிட்டீர்கள்," என்று கூறியது.இது குறித்து ஆச்சரியம் தெரிவித்த நீதிமன்றம், “அலோபதியில் கோவிட் சிகிச்சை இல்லை என்று பதஞ்சலி நிறுவனம் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அரசு ஏன் கண்களை மூடிக்கொண்டது?” என்று கூறியது.

  16. போதைப்பொருள் விவகாரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிப்பேன்: இயக்குநர் அமீர்

    இயக்குநர் அமீர்

    சென்னையில் இருக்கும் இயக்குநர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (செவ்வாய், ஏப்ரல் 9) முதல் சோதனை மேற்கொண்டனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாகச் சொல்லப்படும் விவகாரத்தில், சமீபத்தில் அவர் டெல்லியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்முன் ஆஜரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து, ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் திடல் தொழுகையி்ல் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், தன் மீதான குற்றச்சாட்டுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நிருபிப்பேன்,என்றார். “விரைவில் இதுகுறித்து ஒருநாள் பேசுவேன்.நான் இப்போதும் சொல்கிறேன் எந்த விசாரணைக்கும் நான் தயார், அமலாக்கத் துறை விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா? இல்லையா என்பது தெரியவில்லை,” என்றார்.

    மேலும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தன்னிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தியது என்றும், இப்போது அமலாக்கத் துறை ரெய்டும் நடந்திருக்கிறது, ஆனால் என்ன எடுத்துள்ளார்கள் என அவர்கள் தான் சொல்ல வேண்டும்,என்றார்.

    “இந்த விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நான் தயார். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்பதை நிரூபிப்பேன். இது குறித்து முழுமையாக பேச கொஞ்சம் அவகாசம் தாருங்கள்,” என்றார்.

  17. கோவையில் திமுக, அதிமுகவை விஞ்சி அண்ணாமலையால் சாதிக்க முடியுமா? பிபிசி கள ஆய்வு

  18. மோதி தமிழர்களைக் கண்டுகொள்ளவில்லை: சீமான்

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

    கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில், இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 10) காலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், திராவிட கட்சிகளின் ஆட்சி வந்த பிறகு தான் ஊழல், லஞ்சம், ஒழுங்கற்ற நிர்வாகம், அவதூறு பேச்சு, விமர்சனங்கள், அநாகரிக பேச்சுக்கள், ஆகியவை அரங்கேறியதாகத் தெரிவித்தார்.

    மேலும், அவர் பாஜக-வையும் விமர்சித்துப் பேசினார். “பிரதமர் நரேந்திர மோதி திடீரென பணம் செல்லாது என அறிவித்தார். யாரை பிடிக்கவில்லையோ அவர்களை என்ஐஏ மூலம் கைது செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என அழித்து ஒழிக்க நினைத்தால் நாட்டில் ஜனநாயகம் எங்கே இருக்கும்?” என்று பேசினார்.

    மேலும், மதத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மக்களை பற்றி எப்படி சிந்திப்பார்கள்? இத்தனை முறை ரோடு ஷோ செய்யும் மோதி, தமிழகம் வெள்ளத்தில் மிதந்த போது ஒரு தடவை கூட வந்து பார்க்கவில்லை, என்றார்.

    “பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் பிடித்தது தொங்குவது என்பது மிகப்பெரிய பேராபத்து,” எனத் தெரிவித்தார்.

  19. மீண்டும் வெற்றிப் பாதையில் சிஎஸ்கே - தோனி, ஜடேஜா, கேப்டன்சி பற்றி ருதுராஜ் கூறியது என்ன?

  20. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசே யுஏஇ, வங்கதேசத்திற்கு விற்பது ஏன்? பல கோடி ரூபாய் லாபம் யாருக்கு?